பக்கம்:மூவரை வென்றான்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

61


வெள்ளையத்தேவன். அப்போது மாலைப்போது கழிந்து, இருள் சூழ்ந்துகொண்டிருந்தது.

கிழவர் ஆரம்பித்தார்: “வெள்ளை! இந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டுமானால், நாம் கொள்ளைக்காரர்களாக மாற வேண்டும். முள்ளை முள்ளால்தான் எடுக்கவேணும். வேறு வழியில்லை...”

“மாமா! நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே!... தெளிவாகச் சொல்லுங்கள்...”

“சொல்கிறேன் கேள் வெள்ளை! நம்முடைய கொங்கு மலையின்மேல் ஒரு பாறைக் குகை இருக்கிறதே, உனக்குத் தெரியுமோ?”

“ஏன்? நான் வேட்டைக்குப் போகும்போதெல்லாம் அந்தக் குகைப்பக்கம் போவேனே!”

“நாளை விடிவதற்குள் பண்ணைத்தேவனின் மகளை அந்தக் குகையில் கொண்டுபோய் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் சிறைப்படுத்தி வைத்துவிட வேண்டும். உன்னை யும் என்னையும் தவிர வேறு எவருக்கும் இந்த இரகசியத்தை வெளியிட்டுவிடக் கூடாது.”

“என்ன! பண்ணைத்தேவரின் மகளையா?”

“ஆமாம்! மீனாட்சியை உன் மருமகன் காலில் விழுந்து ஏற்றுக்கொள்ளுமாறு செய்வதற்கு வேறு வழியே இல்லை. வெள்ளை பண்ணைத்தேவர் மகள் பொன்னியைச் சில்காலம் நாம் மறைத்து வைக்க வேண்டும். அதனால்தான் கரிசல் குளத்தான் உன் தங்கையை நாடச் செய்யலாம்.”

“சரி மாமா! அப்படியே வைத்துக் கொண்டாலும் இப்போது அதைச் செய்வதற்கு முடியுமா?”

ஏன் முடியாது வெள்ளை நாளைக்கு விடிந்தால், உன் மருமகன் பண்ணைத்தேவரிடம் பரிசம் போட்டுவிடுவான். இன்றைக்கு இரவு பின் நிலா. நம் காரிய்த்தைச் செய்ய வசதியாக இருக்கும்! நேரே கரிசல்குளம் போக்வேண்டியது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/63&oldid=508093" இலிருந்து மீள்விக்கப்பட்டது