பக்கம்:மூவரை வென்றான்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

மூவரை வென்றான்/வெள்ளையத்...


ஒன்று மட்டும்தான் இருந்தது. மாமன் கொடுத்தனுப்பி யிருந்த பச்சிலை, மார்புச் சட்டையின் பைக்குள்ளே இருந்தது!

கொள்ளைக்காரர்கள் பத்துப் பன்னிரண்டு பேர்களாவது இருப்பார்கள். ஒவ்வொருவருவர் கையிலும் ஒரு சிறு தீவட்டி யும் இருந்தது. வெள்ளையத் தேவன் எந்தக் காரியத்தைச் செய்வதற்காகத் தயங்கித் தயங்கிச் சுற்றிவந்து கொண்டிருந் தானோ, அதே காரியத்தை அவர்கள் சுலபமாகச் செய்து கொண்டிருந்தனர். மதிற்கூவரையொட்டி ஒரு ஆள் சற்றே குனிந்தாற்போல நின்றுகொண்டான். கொள்ளைக்காரர்கள் ஒவ்வொருவராக அவன் முதுகில் பச்சைக் குதிரை விளையாடு வதைப்போல ஏறி, மதிற்கூவரைத் தாண்டி உள்ள்ே குதித் தனர். இருளில் நின்றுகொண்டிருந்த வெள்ளையத் தேவன் கூர்ந்து கவனித்தான். அவன் மூளை மிகவும் சுறுசுறுப்போடு வேலை செய்தது.

இன்னும் நாலைந்து கொள்ளைக்காரர்களே தாவி ஏற வேண்டியிருந்தது. அவர்கள் கைகளிலிருந்த தீவட்டிகளைத் “தாவிக் குதிப்பதற்கு இடையூறாக இருக்கும் என்று கருதி, முன்பே ஏறியவர்கள் உள்ளே வாங்கிக் கொண்டுபோயிருந் தார்கள். குனிந்து கொண்டிருந்தவன், முதுகில் ஏறித் தாவு வதற்குக் காத்திருந்தவர்கள்-ஆகியோர் அங்கே நிற்பது: கண் பார்வையைத் தீட்சண்யப்படுத்திக்கொண்டு பார்த்தா லொழியத் தெரியாது. அவ்வளவு இருட்டு.

சட்டென்று அடிமேல் அடி வைத்து, மெல்ல அவர்கள் தாவிக்கொண்டிருந்த இடத்தை அடைந்தான். வெள்ளையத் தேவன். ஆயிற்று! கடைசி ஆளும் தாவிக் குதித்துவிட்டான். கடைசி ஆளின் தலை சுவருக்கு அப்பால் மறைவதைப் பார்த்து விட்டு குனிந்திருப்பவன் நிமிர்வதற்குள் தானும் அவனைச் சாதனமாகக்கொண்டே, தாவிவிடக் கருதிய வெள்ளைத் தேவன் விருட்டென்று பாய்ந்து, குனிந்திருந்தவன் முதுகில் கைகளை ஊன்றினான். குனிந்திருந்தவனும் அவனை வேற்றாள் என்று கருதியதாகத் தெரியவில்லை. ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/66&oldid=508096" இலிருந்து மீள்விக்கப்பட்டது