பக்கம்:மூவரை வென்றான்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

65


அவசரத்தினாலும், ஆத்திரத்தினாலும் தாவிய வேகத்தில் முதுகில் கை வைப்பதற்குப் பதிலாகக் குனிந்திருந்தவனின் கழுத்தில் கையை வைத்துவிட்டான், தேவன். இதனால் குனிந்திருந்தவனும், வெள்ளைத் தேவனும் ஒருங்கே ஒருவர் மேல் ஒருவராகக் கீழே விழுந்து புரண்டார்கள்.

கீழே விழுந்து புரண்ட கலவரத்திலே குனிந்திருந்த ஆள் தேவனைச் சந்தேகிக்கும் படியாகக் குழப்பம் ஒன்று நடந்து விட்டது. கையைக் கழுத்தில் வைத்துக் கீழே விழுந்தவுடன், பார்த்து ஏறக்கூடாதுங்களா?” என்று கம்பளத்து நாயக்க்மார் பேசும் ஒரு வகைத் தெலுங்கிலே குனிந்திருந்தவன். கொச்சையாகக் கேட்கவே, அதற்கு எப்படிப் பதில் சொல்வது என்று விளங்காமல் திகைத்தான் தேவன்.

இதற்குள் உள்ளே சென்றிருந்த கொள்ளைக்காரர்களுடைய சங்கேதமான ஒலி ஒன்று, “நாங்கள் அத்தனை பேரும் சென்றுவிட்டோம்” என்பதற்கு அறிகுறியாகச் ‘சீழ்க்கை’ ரூபத்தில் ஒலித்துவிட்டது. அந்த ஒலியைக் கேட்ட மாத்திரத்தில் மறுபடியும் எழுந்திருந்து குனிவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த அந்தப் பருத்த மனிதன் குனிவதை நிறுத்திவிட்டு, “யாரடா நீ?” என்று வெள்ளையத் தேவன் மேல் குபிரென்று பயந்தான்!

எப்போது, தான் தாவவேண்டிய குறி தவறிவிட்டதோ, அப்போதே இம்மாதிரி ஆபத்து எதுவும் நேரலாம் என்று தயாராக எதிர்பார்த்துக்கொண்டிருந்த வெள்ளையத்தேவன், தன்னை நோக்கிப் பயந்தவனின் வாயை ஒரு கையால் இறுகப் பொத்திக்கொண்டு, அவனை இந்தப்புறம், அந்தப் புறம் திமிர முடியாமற் கட்டி, மூக்கில் பச்சிலையை எடுத்துக் காட்டினான். முழுசாக இரண்டு விநாடி கழிவதற்குள் அந்த மனிதன் கீழேவிழுந்துவிட்டான். முற்றிலும் பிரக்ஞை தவறிப் போய்விட்டது, அவனுக்கு. அவனை மெல்ல இழுத்துச் சென்று, தோட்டச்சுவரின் தென்புறத்திலுள்ள பாழுங்கிணறு ஒன்றின் ஒரமாக இருந்த புதரில் தள்ளிவிட்டு வெள்ளையத் தேவன் திரும்பவும், மிக அருகில், இரண்டு குதிரைகள் நடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/67&oldid=508097" இலிருந்து மீள்விக்கப்பட்டது