பக்கம்:மூவரை வென்றான்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

மூவரை வென்றான்/வெள்ளையத்...


போட்டு வரும் குளம்பொலி கேட்கவும் சரியாக இருந்தது. முதலில் பயமும், சந்தேகமும் அடைந்தாலும் பின் சிந்தித் தான். வேறு யார் வரக்கூடும்? மாமன்தான் நேரமாயிற்றே, இந்த வெள்ளையை இன்னும் காணோம் என்று குதிரை மீது வரக்கூடும் என்று அனுமானித்தான் தேவன்.

இப்படி எண்ணிக்கொண்டு மனத் தைரியத்தோடு குளம்பு ஒலி வந்த திசையில் வேகமாக எதிர்நோக்கி நடந்தான் வெள்ளையத் தேவன். இவன் எண்ணியது வீண்போக வில்லை! மாமன்தான் வந்துகொண்டிருந்தார். குதிரையின் அருகில் வெள்ளை நெருங்கியதும், “யாருடா அவன்?” என்று இடுப்பிலிருந்த கத்தியை உருவினார் மாமன்.

“ஏது? மிரட்டல் பலமாக இருக்கிறதே மாமா?” - இலேசாகச் சிரித்துக்கொண்டே கேட்டான், வெள்ளையத் தேவன்.

நடந்த விஷயத்தை ஆதியோடந்தமாகக் கூறிய பின், “இப்போது நாம் என்ன செய்யலாம் மாமா?” என்று கேட்டான் அவன்.

“வெள்ளை! பகைவர்களைவிட அயோக்கியர்கள் மோச மானவர்கள். அயோக்கியர்களின் காரியம் தனக்கு நன்மை யைத் தருமானாலும் அதைத் தடுப்பதுதான் மற்வனின் அறம்: இப்போது இங்கே தீவட்டிக் கொள்ளையடிக்க வந்திருக்கும் அத்தனை திருடனும் வேற்றவராகிய கம்பளத்து நாயக்கமார் கள். பண்ணைத் தேவருடைய சொத்தை இவர்கள். கொள்ளையடித்துக்கொண்டு விடுவார்களானால், நமக் கென்ன லாபம்? பண்ணைத் தேவரை இந்தப் பயங்கரத்தி லிருந்து நாம் காப்பாற்றுவோமானால், நாளை அவரிடமே, ‘மீனாட்சியின் கணவன் சொத்துக்கு ஆசைப்பட்டு அவளைப் ஒதுக்கிவிட்டு, உங்க மகளுக்குப் பரிசம் போடுகிறேனென்று வருகிறான். நீங்கள் அவனுக்குப் புத்திமதி சொல்லி, நல்லபடி யாக மீனாட்சியை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்!’ என்று வேண்டிக்கொள்ளலாம்.” மாமா கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/68&oldid=508098" இலிருந்து மீள்விக்கப்பட்டது