பக்கம்:மூவரை வென்றான்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

67


“நீங்கள் சொல்வதும் ஒருவகைக்கு நல்லதாகத்தான் படு கிறது மாமா!”

“யோசனைக்கு இது நேரமில்லை வெள்ளை உடனே புறப்படு. குதிரையில் ஏறிக்கொள்.”

இருவரும் குதிரையில் ஏறிக்கொண்டனர். கடிவாளத் தைச் சுண்டி வேகமாக மீண்டும் பண்ணைத் தேவர் மாளிகையை நோக்கிச் செலுத்தினான் வெள்ளையத்தேவன் ‘மாமனும் பின்தொடர்ந்தார். மதிலோரமாகவே கொள்ளைக் காரர்கள் ஏறிக்குதித்த இடத்தருகே வந்து குதிரையை நிறுத்தினார்கள்.

“மாமா! உள்ளே போயிருக்கின்ற திருடர்களோ, பன்னிரண்டு பேருக்குமேல் இருப்பார்கள். நாமோ, இரண்டு பேர்! எப்படி நாம் அவர்களிடமிருந்து தேவரின் சொத்தை மீட்பது? ஏதாவது தந்திரமாகச் செய்தால்தான் இந்த முயற்சியில் நமக்கு வெற்றி கிடைக்கும்” என்று குதிரையை இழுத்து நிறுத்திக் கொண்டே கூறினான் வெள்ளையத் தேவன்.

“தந்திரமான வழி ஒன்று இருக்கிறது வெள்ளை! நாமிருவரும் இங்கேயே நின்றுகொள்ள வேண்டியது. உள்ளே நாம் போகவே வேண்டாம். அவர்கள் நிச்சயமாக் எவரையும் உயிர்ச் சேதப்படுத்தப் போவதில்லை. வேண்டுமானால் கட்டிப் போட்டுவிட்டுக் கொள்ளையடித்கப் போகிறார்கள். இந்தக் கம்பளத்தார் திவட்டிக் கொள்ளை யடித்து விட்டு மீண்டும் மதில் வழியாக ஏறிக்குதிப்பதற்கு இந்த இடத்திற்குத்தான் வரப்போகிறார்கள். கொள்ளை வெற்றிகரமாக முடிந்து திரும்பும்போது தீவட்டியை அணைத்துவிடுவதும் இவர்களுடைய வழக்கங்களிலே ஒன்று. இதனால் இருட்டு நம் காரியத்துக்குப் பெரிதும் உதவி செய்யும்.

“என்ன தந்திரம் மாமா அது?”

“போகும்போது அவர்கள் ஒரு ஆளை முதுகில் காலை வைத்து ஏறுவதற்காகப் பயன்படுத்தினார்கள் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/69&oldid=508099" இலிருந்து மீள்விக்கப்பட்டது