பக்கம்:மூவரை வென்றான்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

69


முதல் ஆள் கையில் ஒரு பெரிய மூட்டையோடு மாம னின் முதுகில் காலை வைத்து இறங்கினான். தேவன் திடீ ரென்று பாய்ந்து அவன் கூச்சல் இடாமல் , வாயை மூடி, அவனிடமிருந்த மூட்டையைப் பறித்துக்கொண்டு, அவனைச் சுருள் கத்திக்கு இரையாக்கிப் பாழுங்கிணற்றுக்கு அனுப் பினான். இப்படியே மற்றும் பதினோரு திருடர்களையும் பர லோகத்துக்கு அனுப்பிவிட்டனர் தேவனும் மாமனும்!

பதின்மூன்றாவது ஆள் அந்தத் தீவட்டிக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருக்கவேண்டும்! அவனுக்கு மட் டும் அவர்கள் தந்திரம் அம்பலமாகிவிட்டது. காரணம்: அவன் மட்டும் கையில் ஒரு சிறு தீவட்டி வைத்திருந்தான். சுவரில் தீவட்டியோடு நின்ற அவன், உடனே மாமனின் முதுகிலே காலை வைத்து இறங்க முற்படாமல், மேலே நின்றுகொண்டே, தீவட்டியை மாமனின் முகத்துக்கு நேரே கீழே வீசி எறிந்தான். தீவட்டி கீழே விழவும் சுற்றிலும் இருள் விலகி ஒளி தோன்றியது.

தன் ஆட்கள் எவரும் அங்கே இல்லாததையும் சுவரோரமாக இரத்தம் தோய்ந்த சுருள் கத்தியோடு இளங் காளை போன்ற ஒருவன் நின்றுகொண்டிருப்பதையும், அவன் காலடியில் கொள்ளைப் பொருளின் மூட்டை கிடப் பதையும், குனிந்து நிற்பவன் வேற்றாள் என்பதையும்’ அவன் தீவட்டி ஒளியில் அந்த ஒரு விநாடியில் நன்றாகப் புரிந்துகொண்டான். யுத்தியில் கைதேர்ந்த அந்தக் கொள் ளைக் கூட்டத் தலைவன், சிந்தனை தேங்கிய மனத்தோடு மீண்டும் விழிகளைச் சுற்றும் முற்றும் ஒட்டினான். பத்து இருபது அடி தூரம் மேற்கே தள்ளிச் சுவர் ஒரமாக இரண்டு குதிரைகள் சவாரிக்கு ஏற்ற நிலையில் தயாராக நிறுத்தப் பட்டிருப்பதையும் அவன் கண்கள் கண்டு கொண்டன.

சுவரின்மேல் நிற்பவன் தயங்குவதைக் கண்டதுமே தேவனும் மாமனும் ‘விழித்து’க் கொண்டனர். தங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/71&oldid=508101" இலிருந்து மீள்விக்கப்பட்டது