பக்கம்:மூவரை வென்றான்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

75

"தாராளமாகச் சொல்லுங்கள்! என்னுடைய சொத்தை யெல்லாம் மீட்டுக் கொடுத்து இன்றிரவு. நீங்கள் எனக்குச் செய்திருக்கும் மகத்தான உதவிக்கு நான் பெரிதும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.”

“வேறொன்றுமில்லை! நாளைக் காலையில் மீனாட்சியை ஒதுக்கி வைத்த அதே பயல்தான் உங்கள் பெண் பொன்னிக்குப் பரிசம் போட வரப்போவதாக நாங்கள் கேள்விப்பட்டோம்...அதுதான்..”...மாமன் மெதுவாகப் பணிந்த குரலில் இழுத்துப் பேசினார்.

“என்ன? எல்லாம் பெரிய சூழ்ச்சியாக அல்லவா இருக்கும் போலிருக்கிறது: கரிசல்குளத்து நாட்டாண்மையின் மாமன் என்னிடம் வந்து, தன் வகையில் யாரோ ஒரு பையனை அல்லவா பரிசம்போட நாளைக் காலை அழைத்து வருவதாகக் கூறினான்? ஓஹோ! நீங்கள் இப்போது கூறினபின்னல்லவா இதில் அடங்கியுள்ள சூது புலனாகிறது? தானே நேரில் வந்தால் மீனாட்சியை ஒதுக்கி வைத்த விவகாரம் எல்லாம் தெரிந்துவிடும் என்று பயந்து, தன் மகனுக்கு என் மகளை முடித்து, எனது சொத்துக்களை அபகரிக்கத் தனது மாமனை அல்லவா தூதனுப்பியிருக்கிறான்? அப்படியா விஷயம்?” — பண்ணைத் தேவர் ஆத்திரத்தோடு பேசினார். நாட்டாண்மையிடம் அவருக்கிருந்த சினத்தை இந்தக் கோபமே காட்டியது.

திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டே வெள்ளையன், “மாமா! நான் பச்சிலையைக் காட்டி மூர்ச்சியுறச் செய்து ஒரு ஆளைப் புதரில் தள்ளினேன் அல்லவா? அவனுக்கு இந்நேரம் பிரக்ஞை வந்தாலும் வந்திருக்கும், பயல் வெளியே நிறுத்தியிருக்கும் மற்றோர் குதிரையைத் ‘தன் பங்குக்கு ஆயிற்று'—என்று ஏறிக்கொண்டு போய்விடப் போகிறான்! நான் போய். அவன் அகப்பட்டால், அந்தப் பயலை இங்கே இழுத்துக் கொண்டு வருகிறேன்"–என்று கூறிக்கொண்டே எழுந்தான்.

அதற்குள் பண்ணைத் தேவரே, “கொஞ்சம் பொறு தம்பி! பின் நிலர உச்சிக்கு வந்துவிட்டது. நாம் எல்லோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/77&oldid=508107" இலிருந்து மீள்விக்கப்பட்டது