பக்கம்:மூவரை வென்றான்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

மூவரை வென்றான்


தெரியவில்லை, இந்தக் கைகாட்டி மரத்தருகிலேயே நிரந் தரமாக நின்றுவிட்டது.

பஸ் கிளம்பாது என்பது உறுதியாகிவிட்டது. அப்போது மாலை நான்கு மணி. அதே கம்பெனியைச் சேர்ந்த மற்றொரு பஸ் மதுரையிலிருந்து புறப்பட்டு அந்த ‘ரூட்’டில் அந்த இடத்திற்கு வருவதற்கு இரவு எட்டரை மணி ஆகுமென்றும், அது வரை நாங்கள் காத்திருந்துதான் ஆகவேண்டும் என்றும் கண்டக்டர் கூறினார்.

“அந்த ஊரில் ஹோட்டல் இருக்கிறதா?” என்று விசாரித்துக்கொண்டு நாங்கள் ஏழெட்டுப் பேர் காப்பி சாப்பிடுவதற்காக ஒன்றரை மைல் தூரம் நடக்கத் தீர்மானித்துவிட்டோம். காப்பியையும் சாப்பிட்டுவிட்டு அந்த ஊரின் பெயர் விசேஷத்தையும் அறிந்துகொள்ளாமல் பஸ்சுக்குத் திரும்புவதில்லை என்று நான் மட்டும் எனக்குள் தனிப்படத் தீர்மானம் ஒன்றும் செய்துகொண்டேன்.

வாய்க்கால், வரப்புகளின் மேல் குறுக்கிட்டுச் சென்ற, மேடுபள்ளம் மிகுந்த வண்டிப் பாதையில் நடந்தோம்.

அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் ‘ஹோட்டல்’ என்ற பெயருக்குரிய போர்டு மாட்டாத கூரைக் குடிசையைக் கண்டுபிடிப்பதுதான் கஷ்டமாக இருந்தது. அது மட்டுமா? அங்கே காப்பி என்ற பெயரில் கிடைத்த திரவத்தைச் சாப்பிடுவதும் கஷ்டமாகத்தான் இருந்தது.

காப்பி என்ற பெயரில் எதையோ குடித்துவிட்ட திருப்தியில் மற்றவர்கள் எல்லோரும் கார் நின்ற இடத்திற்குக் கிளம்பிவிட்டார்கள். நீங்கள் போங்கள். நான் கொஞ்சம் இருந்து வருகிறேன்’ என்று அவர்களிடம் கூறிப் பின்தங்கி விட்டேன் நான்.

ஹோட்டல் வாசலில் இருந்த வெற்றிலைப் பாக்குக் கடையில் உட்கார்ந்து கொண்டிருந்த வயதான பெரியவர் ஒருவரை அணுகினேன். மெல்லப் பேச்சைக் கிளப்பினேன். என்னுடைய வெளுத்த உடைக்கும் கைக்கடியாரத்திற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/8&oldid=505343" இலிருந்து மீள்விக்கப்பட்டது