பக்கம்:மூவரை வென்றான்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மூவரை வென்றான்

"குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, தனக்கு ஆயுதங்கள் எதற்கு? என்றெண்ணிய வெள்ளையன், “இந்தா எடுத்துக்கொண்டு போ!’ என்று தன் ஆயுதங்களை யெல்லாம் களைந்து பளிஞனுக்காகக் கீழே வைத்துவிட்டுக் குகையை நோக்கி நடந்தான். பளிஞன் ஓடிவந்து, வில்லையும் ஆம்பறாத் தூணியையும் கையில் எடுத்தான்.

மறு விநாடி குகைக்குள் நுழைந்து கொண்டிருந்த வெள்ளையன், ‘ஆ!’ என்று அலறிக்கொண்டே, சுருண்டு விழுந்து பாறைகளில் உருண்டான். யாரோ தடதடவென்று ஓடிவரும் சப்தம் அவனுடைய செவிகளில் விழுந்தது. ஒரு கூரிய அம்பு அவன் முதுகிலே பாய்ந்து மார்பு வழியாக ஊடுருவியிருந்தது. அதிலிருந்து குருதி பீறிட்டுப் பாறைகளில் வடிந்து, சுனை நீரில் சங்கமமாகி, அதன் படிக நிறத்தைச் இவப்பாக்கிக் கொண்டிருந்தது. மறுபடி வெள்ளையத் தேவனுக்குப் பிரக்ஞை வந்தபோது, தான் குகைக்குள்ளே படுக்க வைக்கப்பட்டிருப்பதையும், தன் மார்பை ஊடுருவியிருந்த அம்பு எடுக்கப்பட்டு, அதில் பச்சிலை மருந்து இட்டுக் கட்டப்பட்டிருப்பதையும் தன்னோடு வந்த அந்தப் பளிளுனைக் குகையில் ஒரு பாறைமேல் கொடிகளால் இறுக்கிக் கட்டியிருப்பதையும் கண்டான். அவனைச் சுற்றி அவன் சகாக்களான தலைக்கட்டுக்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் முகத்தில் துயரம் நிறைந்திருந்தது.

அவனுக்குப் பிரக்ஞை வந்து கண் விழித்ததைக் கண்டதும், தலைக்கட்டுக்கள் துயரம் தாங்க முடியாமல் ‘ஹோ’ வென்று வாய்விட்டு அலறிவிட்டார்கள். வெள்ளையத் தேவன் அழவில்லை. அம்பு ஊடுருவியிருந்த வலியை அவன் பொருட்படுத்தவில்லை. அவன் முகத்தில் மனித நயனங்கள் காணக்கிடைக்காத தெய்வீக தேஜஸ் படிந்திருந்தது. பாரிஜாத புஷ்பத்தைச் சரப்படுத்தி வைத்தாற்போன்ற ஓர். அற்புதமான சிரிப்பு அவன் இதழ்களை அணி செய்தது. ‘வெள்ளையத் தேவன்', தன் எதிரே பாறையில் கட்டிவைத் கப்படடிருந்த அந்தப் பளிஞனைச் சிறிது நேரம் அதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/86&oldid=508115" இலிருந்து மீள்விக்கப்பட்டது