பக்கம்:மூவரை வென்றான்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைவெட்டிக்காடு

நிம்முடைய தமிழ் நாட்டில் ராமநாதபுரம் ஜில்லாவுக்கு என்றே சில சிறப்பியல்புகள் உள்ளன.

வெயில் காலத்தில் வெயில் அதிகம். மழை காலத்தில் மழை குறைவு. ஒற்றையடிப் பாதைகளையும் வண்டிப் பாதைகளையும் தவிரக் கார் செல்ல் ஏற்ற சாலைகள் இல்லாத, கிராமங்கள். தப்பித்தவறி ஒரு ஊருக்கு ரயில்வே ஸ்டேஷன் இருந்தால், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஊர் நாலைந்து மைலுக்கு அப்பால் இருக்கும். சாலைதான் கிடையாது. ஒற்றையடிப் பாதைகளிலோ, வண்டிப் பாதைகளிலோ நிழல் மரங்களாவது இருக்குமோ என்றால், அந்த அம்சமும் பூஜ்யம் கிணறுகள் இருக்கும்; ஆனால், அவற்றில் தண்ணீர்தான் இருக்காது.

இவற்றையெல்லாம் சிறப்பியல்புகள் என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்வது?

எங்கள் ஊருக்கு ரயில்வே ஸ்டேஷன் இருந்தது. எங்கள் ஊரில் ர்யில்வே ஸ்டேஷன் ஏற்பட்ட விஷயம். ஒரு ரசமான கதை. ரயில் பாதைக்கு வடக்கே ராமலிங்கபுரம் என்று மூன்றரைமைவில் ஒரு ஊர் இருந்தது. தெற்கே கிருஷ்ணாபுரம் என்று ஜந்து மைலில் ஒரு ஊர் இருந்தது. கிருஷ்ணாபுரத்தி லிருந்து நாலு பர்லாங் நட்ந்தால், நேரே தென்திசையில் எங்கள் ஊர், நதிக்குடி என்று பெயர். முதல்முதலாக ஸ்டேஷன் ஏற்பட்டபோது ராமலிங்கபுரத்தார் தங்கள் ஊரின் பெயரையே ஸ்டேஷனுக்கு வைக்கவேண்டுமென்று ரயில்வேக்கு மகஜர் போட்டார்கள். தெற்கே கிருஷ்ணா புரத்தார் சும்மா இருப்பார்களா? அவர்கள் தங்கள் ஊரின் பெயரையே ஸ்டேஷனுக்கு வைக்கவேண்டுமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/92&oldid=507996" இலிருந்து மீள்விக்கப்பட்டது