பக்கம்:மூவரை வென்றான்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

மூவரை வென்றான்/தலைவெட்டிக்...

மட்டும் பழையபடி சிவகாசிக்கே போய் வந்து கொண்டிருந் தார். அநேகமாகப் பகல் நேரங்களில்தான் அவரும் போக்குவரவு வைத்துக் கொண்டார். மாறனேறி, தாள் கொண்டான்புரம் அம்பலக்காரர்கள் பலர் ஐயரிடம் சிலம்பம், குஸ்தி முதலியவற்றைக் கற்றுக் கொண்ட சீடர்கள், அவர் பலமும், துணிவும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

‘அடே! அந்த மோதிரக் கடுக்கன் முத்துவையன் எம - காதகப் பயல்...அவன் கிட்ட மட்டும் போய் வாலை ஆட்டி வைக்காதிங்க...நமக்கெல்லாம் குஸ்தியும், சிலம்பமும் தெரி புதுன்னா அது அந்த ஐயன் இட்டபிச்சை’ என்று வயதான அம்பலக்காரர்கள் இளம் பிள்ளைகளிடம் அடிக்கடி எச்சரிப்ப துண்டு.

தலைவெட்டிக்காடு பள்ளித்தில் கொலை, கொள்ளை களைச் செய்து நதிக்குடியூராரைப் பழி தீர்த்துக்கொண்ட அம்பலகார இளைஞர்கள், மேற்படி எச்சரிக்கைக்காக மட்டு மின்றி, சொந்த பயத்தினாலும் ஐயரை நெருங்க அஞ்சிப் பேசாமல் இருந்தனர்.

அவர் வழக்கம்போல் தனி ஆளாகத் தலைவெட்டிக் காட்டைக் கடந்து மாறனேரிப் பாதையாகச் சிவக்ாசிக்குப் போய் வந்துகொண்டுதான் இருந்தார். கருங்காலி மரத்தில் வெட்டி எடுத்த சிலம்பக் கழி ஒன்று மட்டும் அவர் கையிலிருக்கும்.

முதலில், தான் மட்டும் போய் வந்து கொண்டிருந்த ஐயர், நள்ளடைவில் அந்தப் பாதையில் போகப் பயப்பட்ட வேறு சிலரையும் தம்முடைய மேற்பார்வையில் கூட்டிச் சென்று வந்தார். அம்பல்காரர்கள் யாரைத் துன்புறுத்தினாலும், துன்புறுத்தினவ்ர்களுக்காகத் தாமே வலுவில் பரிந்து கொண்டு அம்பலகாரர்களை எதிர்த்தார்.

‘ஏலே நீங்க சாதி மறவர்களா இருந்தா வாங்கடா பார்ப்போம்.இந்த ஒத்தச் சிலம்பக் கழிக்குப் பதில் சொல்ல முடியுமாடா உங்களாலே?...இந்தப் பள்ளத்து வழியா வருகிற நதிக்குடிக்காரன் எவன் மேலேயாவது கை வச்சிங்களோ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/98&oldid=508123" இலிருந்து மீள்விக்கப்பட்டது