பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 81 சொல் வேந்தரும் தமக்கு அருள் புரிந்த இறைவனது பெருங் கருணைத் திறத்தை வியந்து, நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர் இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. என வரும் 'திருத்தாண்டக மாலை (6.14:1) பாடிப் பரவிப் போற்றினார். இத்திருப்பதிகத்தில் அமைந்த பாடல்களின் இறுதி தோறும் திருவடியென தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே என்ற அடிகளால் இந்த அற்புத நிகழ்ச்சியை நினைந்துருகிப் போற்றியுள்ளமையைக் கண்டு மகிழலாம். (9) விடந்தீர்த்தல்: நல்லூரில் சிவபெருமானால் திருவடி சூடப் பெற்ற நாவுக்கரசர் சில நாட்கள் அத்திருத்தலத்தில் தங்கி யிருக்கிறார்; பின்னர் பல தலங்களைச் சேவித்துக் கொண்டு திங்களுர்" வழியாகச் செல்லுகின்றார். தண்ணீர் பந்தல் ஒன்று அவர் கண்ணில் படுகின்றது; திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தல்' என்ற பெயர் அதன்கண் காணப்பெறுகின்றது. இன்னும் பல இடங்களில் 'திருநாவுக்கரசர் தண்ணிர்ப் பந்தல்' என்ற பெயர் காணப்பெறுகின்றது. உசாவி அறிந்ததில் திருநாவுக்கரசர் பெயரில் அப்பூதியடிகள் என்ற அந்தணச் செம்மல் பல அறங்களைச் செய்து வருகின்றார் என்பதை அறிகின்றார். அவர் இருப் பிடத்தை உசாவி 62. திங்களுர் - அப்பூதியடிகள் வாழும் ஊர்.