பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iO4 மூவர் தேவாரம் - புதிய பார்வை 3. சுந்தரமூர்த்தி அடிகள் பேரூரும் பரவைமணப் பிணக்கறாளம் பெருமானை ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்எனத் தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய் ஆரூரா! நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே. இராமலிங்கர் (திருவருட்.ஐந்திருமுறை ஆளுடைய நம்பிகள் அருள்மாலை - 10) நடுநாட்டின் தலைநகர் திருநாவலூர் அவ்வூரில் ஆதி சைவ மறையவர் மரபில் தோன்றியவர் சடையனார்; அவர் துணைவியார் இசைஞானியார். இருவருக்கும் மகனாகப் பிறந்தவர் நம்பியாரூரர். 89. நாவலுர் (திருநாமநல்லூர்) விழுப்புரம் - விருத்தாசலம் இருப்பூர்தி வழியில் பரிக்கல் என்ற நிலையத்திலிருந்து 2 கல் தொலைவில் உள்ளது. பண்ணுருட்டிக்குச் செல்லும் வழியிலுள்ளது.