பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 165 கட்டளை - 5 சீரணி திகழ்தரு மார்பில்வெண் ணுலர் திரிபுர மெரிசெய்த செல்வர் (1.41:1) தானன தானன தானன தான தனதன தனதன தான என வரும். பைம்மா நாகம் பன்மலர் கொன்றை பன்றிவெண் கொம்பொன்று பூண்டு (1.42:1) தானா தானா தானன தானா தானன தானன தானா எனவருவதும் இக்கட்டளையில் அடங்குதல் கண்டு மகிழலாம். கட்டளை - 6 வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்து (1.43:1) தானன தானன தானா தானன தான தனனா கட்டளை - 7 குண்டைக் குறட்பூதங் குழும வனலேந்தி (1.46:1) தானா தனதானா தானன தனதானா என வரும். விண்ட கொடையலான் - ஆடும் - வீரட் டானத்தே தான தனதானா - தானா - தானா தானானா என இப்பாடலின் நான்காம் அடியின் இடையிலே ஆடும்' என்ற ஒருசொல் மிக்கு வந்தமை காணலாம்.