பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 175 அமைந்தவை. இப்பதிகங்களில் காணப்படும் யாப்பு விகற் பங்கள் நான்காகும். மேகராகக் குறிஞ்சி சேவுயருந் திண்கொடியான் திருவடியே சரணென்று சிறந்த அன்பால் (1.129:1) கூவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் புளிமா தேமா (என முதற்கண் காய்ச்சீர் நான்கும் அடுத்து மாச்சீர் இரண்டும் பெற்று அறுசீரடி நான்கினால் வரும் யாப்பு. 129 முதல் 132 வரை அமைந்த திருப்பதிகங்களை நோக்கி அறியலாம்.) 2. வெந்த வெண்பொடிப் பூசுமார் பின்விரி நூலொரு பால்பொருந்த (1.133:1) தான தானன தானன தானன தானன தானதனா 3. கருத்தன் கடவுள் கனலேந்தி யாடும் தனனா தனனா தனதான தானா (1.134:1) 4. நீறு சேர்வதொர் மேனியர் நேரிழை கூறு சேர்வதொர் கோலமாய் (1.1.35:1) தான தானன தானன தானன தான தானன தானனா என முதலடி மூன்றாமடி நாற்சீரினவாகவும் இரண்டாமடி நான்காமடி கள் முச்சீரினவாகவும் வருவன. 'பாவு புகழ் மேகராகக் குறிஞ்சிப் பாலிரண்டு எனத் திருமுறைகண்ட புராணம் கூறுதலால் இப்பதிகங்களுக்குரிய கட்டளைகள் இரண்டு என்பது பெறப்படும். இவண் குறிப்பிட்ட யாப்பு வகைகள் நான்கினையும் கூர்ந்து நோக்குங்கால் அவற்றுள் முதலிரண்டும் ஒரோசையாகவும் பின்னிரண்டும் மற்றோர் ஓசை 13 யாகவும் ஓசை வகையால் ஒத்து நிற்றல் புலனாகும். எனவே