பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 179 யாப்பு - 4 உகலி யாழ்கடலோங்கு பாருளிர் (2.25:1) தனன தானன தான தானனா (25 முதல் 28 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின) யாப்பு - 5 முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும் (2.29:1) தந்தன தனத்தனன தானதன தானா எனவரும். இதன் முதலிலுள்ள 'தந்தன என்பது வல்லெழுத்துப் பெற்றவிடத்து தத்தன எனவும், நெடில் முதலாய வழி தானன எனவும், குறிலிணையாய் வந்து மெல்லெழுத்துப் பெற்றுத் 'தனந்தனன எனவும், வல்லெழுத்தும் பெற்று தனத்தன எனவும் வரும். அடுத்துள்ள தனத் தனன என்பது நெடில் முதலாய் நின்று 'தானதன எனவும் வரும். 'தானதன என்பது குறில் முதலாய் நின்று 'தனாதனன எனவும், வல்லெழுத்துப் பெற்றுத் - "தத்த தனன எனவும், மெல்லெழுத்துப் பெற்றுத் தனந்தனன எனவும் வரும். தானா என்பது 'தனனா எனவும், அமையும், 29 முதல் 34 வரை அமைந்த திருப்பதிகங்கள் குற்றெழுத்துகளே மிகப் பயின்று முடுகியலாக அமைந்தமையால் இவை முன் வியாழக் குறிஞ்சிக்குரிய திருவிராகம் என்ற கட்டளை போன்று இந்தளப் பண்ணிற்குரிய திருவிராகம் என ஒரு கட்டளையாகக் கொள்ளப் பெற்றன. யாப்பு - 6 பரவக்கெடும் வல்வினை பாரிடஞ் சூழ (2.35:1) தனனாதன தானன தானன தான எனவரும். 'தனனாதன, என்பது ‘தானாதன என்றாதலும் ஈற்றிலுள்ள தான என்பது 'தனனா என்றாதலும் உண்டு. 35 முதல் 37 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின் பாற்படும்.