பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 185 தானன தானன தான தான தனந்தன எனவரும். இது வாடிய வெண்டலை மாலை சூடி மயங்கிருள் (2.76.1) தானன தானன தான தான தனந்தன எனவும், காய்ந்த துவும் அன்று காமனை - நெற்றிக் - கண்ணினால் (2.76:4) தான தந்த தந்த தானன - தந்த - தந்தனா எனவும் வருவதுண்டு. 75, 76 - ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. யாப்பு - 6 பீடினாற்பெரியோர்களும் பேதைமைகெடத் தீதிலா (2.77:1) தானனாதன தானனா தானனாதன தானதானா 77, 78-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. யாப்பு - 7 பவளமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு (2.79:1) தனதனா தானனா தானனா தானனா தானனா தானதானா யாப்பு - 8 வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி (2.80:1) தனன தனனா தனனா தனனா தனனா தனனா இப்பதிகம்.