பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 மூவர் தேவாரம் - புதிய பார்வை தனன தானா ஆதலும் தனனா தான ஆதலும் உண்டு யாப்பு - 9 பூதத்தின் படையினி பூங்கொன்றைத் தாரினி (2.81:1) இப்பதிகம் நான்கு காய்ச்சீர்களால் இயன்ற தரவு கொச்சகக் கலிப்பா. ஒரோ வழி விளச்சீரும் பெற்றது. யாப்பு - 10 பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான் (2.82:1) தான தானன தனதன தானன தனனா தான 'தனன. ஆதலும், தனதன தானன ஆதலும், தனனா ‘தானா ஆதலும் அமையும் இப்பதிகம். இவண் குறித்தவற்றுள் 1, 4, 7, 9-ஆம் யாப்பு விகற்பங்கள் ஒசைத் திறத்தால் ஒரு கட்டளையாகவும், 2, 5-ஆம் யாப்பு விகற்பங்கள் ஒரு கட்டளையாகவும், 3, 6, 8, 10-ஆம் யாப்பு விகற்பங்கள் ஒரு கட்டளையாகவும் கொண்டு காந்தார்ப் பதிகங் களை இவ்வாறு மூன்று கட்டளையாக அடக்குதல் ஏற்புடைய தாகும். இனி, பியந்தைக் காந்தாரப் பதிகங்களின் கட்டளைகளை அடியிற் கண்டவாறு குறிப்பிடலாம். பியந்தைக் காந்தாரம் கட்டளை - 1 நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்த நெடுமா வுரித்த நிகரில் (2.83:1) தானனதானதந்த தனதந்தனத்த தனனா தனதத தனனா