பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 199 யாப்பு - 3 பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகள் பயப்பூரச் (3.63:1) தேமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் எனக் காய்ச்சீர் நான்கு பெற்று வந்த தரவுக் கொச்சகக் கலிப்பா, 63 - 66ஆம் பதிகங்கள் ஒரே நீர்மைய 'தூங்கிசை சேர் பஞ்சமதத் திற்கு ஒல்லையினில் ஒன்றாக்கி' எனத் திருமுறை கண்ட புராணம் குறிப்பிடுதலின் பஞ்சமத்திற்குரியனவாக இவண் காட்டிய மூவகை யாப்பினையும் ஒசையொப்புமை நோக்கி ஒரு கட்டளை யாக அடக்குதல் முறையாகும். சாதாரி 67 முதல் 99 வரையுள்ள பதிகங்கள் சாதாரிப் பண்ணுக்கு உரியன. இப் பதிகங்களில் உள்ள யாப்பு விகற்பங்கள் ஐந்தாகும். யாப்பு - 1 சுரருலகு தார்கள்பயில் தரணிதல முரணழிய ஆரணமதில் மூப் (3.67:1) தனனதன தனணதன தனணதன தனனதன தனணதன்னா என வரும். இப்பதிகப் பாடல்கள் குற்றெழுத்துப் பயின்று முடுகியலாய் அடிமுதற்சீரின் இரண்டாமெழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையாய் வந்தமையால் 67-ஆம் பதிகமாகிய இது வழிமெழித் திருவிராகம் என்னும் பெயர்த்தாயிற்று. இதன் திருக்கடைக் காப்பில், கழுமல நகர், பழுதிலிறை யெழுது மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் எனக் குறிக்கப் பெறுதலால், இப்பதிகம் வழியெதுகை யாதல் பற்றி, வழி மொழி என்னும் பெயர் பெற்றமை இனிது புலனாம். இவ்வாறே இதனை அடுத்துள்ள