பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OO மூவர் தேவாரம் - புதிய பார்வை 68-ஆம் பதிகமும் வாளவரி கோள்புலி கீளதுரி தாளின் மிசை நாளு மகிழ்வர்' என்றாங்கு வழியெதுகை பெற்றிருத்தல் காண லாம். வழியெதுகை பெற்று வண்ணத்தின் இயல்புடையனவாக அமைந்த இப்பதிகங்களில் 'தனன தன' என்பது தானதன தந்ததன, தத்ததன, தனத்தன, தனத்தன, தனாதன என வருதலும் அமையும், 69 முதல் 80 வரை உள்ள பதிங்கள் இவண் குறித்த 67, 68-ஆம் பதிகங்களைப் போன்ற யாப்பினவேனும் அவ்விரு பதிகங்களைப் போன்று சீர்தோறும் வழியெதுகை பெறாமல் முடுகியலனவாய் வருதலின் 'திருவிராகம் என வழங்கப் பெறுவனவாயின. யாப்பு - 2 இவண் குறித்த கட்டளையடி போன்று முதல் நான்கு சீரும் அமைய ஐந்தாஞ் சீராகிய ஈற்றுச் சீர் மட்டும் தானா என வருவது சாதாரிப் பண்ணின் இரண்டாம் யாப்பாகும். சங்கமரு முன்கைமட மங்கையொரு பாலுடன் விரும்பி (3.81:1) தந்ததன தந்ததன தந்ததன தானதன தானா என வரும். 81 முதல் 83 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. யாப்பு - 3 பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறை (3.84:1) தந்தன தனதன தனதன தனதன தனதன என வரும். தந்தன தனதன. ஆதலும், தனதன தானன ஆதலும் பொருந்தும். முதல் திருமுறையில் வியாழக் குறிஞ்சிக்குரிய கட்டளைகளுள்,