பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 2O3 பெருமான் பாடிய பதிகங்களில் பழம் பஞ்சுரம் என்ற பண் ணமைந்த பதிகங்கள் உள என்பது நன்கு துணியப்படும். துஞ்ச வருவார் (1.45) என்ற பதிகத்திற்குரிய பழம் பஞ்சுரம் என்ற பெயரை ஒருவர் சொல்ல மற்றவர் கேட்டு விரைவாக எழுதும் நிலையில் பெயரொப்புமையால் அது பழந்தக்கராகம் என எழுதப்பட்டும் பின் அப்பதிகம் தக்கராகப் பண்ணுடன் இணைந்து முதல் திருமுறையில் முறை மாறிக் கோக்கப் பெற்றிருத்தல் வேண்டும் எனவும், இவ்வாறு பழம் பஞ்சுரப் பதிகங்கள் முறை மாறிக் கோக்கப் பெற்ற நிலையில் மூன்றாம் திருமுறையில் அமைந்த பழம் பஞ்சுரப் பதிகங்களின் கட்டளை விகற்பம் திருமுறை கண்ட புராணத்தில் இடம் பெறாது விடுபட்டிருத்தல் வேண்டும் எனவும் கருத வேண்டியிருந்தது. இனி, பழம் பஞ்சுரப் பதிகங்களின் வகையினைக் காண்போம். பழம் பஞ்சுரம் யாப்பு - 1 கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதற் காரிகை மாட்டருளி (3.100:1) தனதன தானன தான தான தானன தானதன என வரும். தனதன தானன ஆதலும், தான 'தனனா ஆதலும், ஈற்றிலுள்ள தானன தானதன என வரும் இரு சீர்களும் தணனா தனதானா எனவும், தனதன தான தனா எனவும், 'தனனா தனதனனா எனவும் வருதலும் அமையும். 100 முதல் 107 பதிகங்கள் ஒரே யாப்பின. யாப்பு - 2 வேத வேள்வியை நிந்தனை செய்துழல் (3.108:1) தான தானன தானன தானனா