பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O8 மூவர் தேவாரம் - புதிய பார்வை என்பன சாதாரிப் பண்ணுக்கு அமைந்த ஒன்பது கட்டளை களாகும். மாலை மாற்று (சித்திர கவி) 117-ஆம் பதிகம் மாலை மாற்று' என்னும் சித்திரக் கவிக்குரிய மூல இலக்கியமாக அமைந்துள்ளது. ஒரு மாலைக்கு அமைந்த இரு தலைப்புகளுள் எதனை முதலாகக் கொண்டு நோக்கினாலும் அம்மாலை ஒரே தன்மையதாகத் தோன்றுமாறு போல, ஒரு செய்யுளை முதலிலிருந்து வாசித்தாலும் அன்றி இறுதி தொடங்கி வாசித்தாலும் அதே செய்யுளாக அமையும்படி ஒத்த கருத்துகளை நிரலே பெற்றிருப்பது மாலை மாற்று' என்ற செய்யுளாகும். யாமா மாநீ யாமாமா யாழி காமா காணாகா கானா காமா காழியா மாமா யாநீ மாமாயா (3.117:1) என்பது மாலை மாற்றுத் திருப்பதிகத்தின் முதற் பாடலாகும். ஈரடிகளாக அமைந்த இப்பாடலில் முதலடியை இறுதி தொடங்கி வாசித்தால் அஃது இரண்டாமடியாக அமைதலும், இரண்டாம் அடியை இறுதி தொடங்கி வாசித்தால் அது முதலடியாக அமைதலும், இவ்விரண்டடிகளையுமே முதலிலிருந்து வாசித் தாலும், இறுதியிலிருந்து வாசித்தாலும் ஒரே பாடலாக அமை தலும் காணலாம். கெளசிகப் பண்ணுக்கு உரியதெனக் குறிக்கப் பெற்ற இப்பதிகம் முன் கெளசிகத்திற்கு உரியதென எடுத்துக் காட்டப் பெற்ற வீடலால வாயிலாய் (3.52) என்ற பதிகத்தினை ஓசை வகையால் ஒத்திருத்தல் உணரத் தக்கதாகும். இப்பதிகத் தினைப் பண்ணடைவுபற்றிக் கெளசிகப் பதிகங்களோடு சார வைத்தல் முறையாயினும் பண்டையமைதியினை மட்டிலும் நோக்காது சித்திரகவி என்னும் சிறப்பொன்றே கருதி மாலை