பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 215 காந்தார பஞ்சமம் இத்திருமுறையில் 10, 11 என்னும் எண்ணுள்ள பதிகங்கள் காந்தார பஞ்சமம் என்ற பண்ணில் அமைந்தன. முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர் (4.10:1) தனதன தனதன தான தானனா என இவ்வாறு விளம், விளம் மா, விளம் என்ற நாற்சீரடிகளால் நடப்பது இக்கட்டளையாகும். 10, 11ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. பழந்தக்க ராகம் 12, 13-ஆம் பதிகங்கள் பழந்தக்க ராகம் என்ற பண்ணுக்கு உரியன. சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே (4.12:1) தானான தனதானா தனதனனா தானானா எனக் காய்ச்சீர் நான்கு கொண்ட அடிகளால் ஆகிய தரவு கொச்சகமாக அமைந்தன இத்திருப்பதிகங்கள். இவற்றின் கட்டளை யடியினைக் கீழ்க்குறித்த வண்ணம் பதினைந்தெழுத்தால் இயன்றன வாகக் கொள்வர் யாழ்நூலார். 14, 15-ஆம் பதிகங்கள் பழம் பஞ்சுரம் என்ற பண்ணுக்கு உரியன. இப்பண்ணமைந்த பதிகங்களில் இரண்டு யாப்பு வடிவங் கள் உள்ளன. பழம்பஞ்சுரம் யாப்பு - 1 பருவரை யொன்று சுற்றி யாவங்கை விட்ட இமையோ ரிநிந்து பயமாய் (4.14:1) தனதனதான தான தனதான தான தனனா தனன தனனா