பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 223 கோதிட்டையும் கோவலும் கோயில்கொண்டீர் உமைக்கொண்டுழல் கின்றதோர் கொல்லைச்சில்லைச் என அறுசீரடியாகப் பிரிந்திசைத்தலும் பொருந்தும். இத் திருமுறை யில் 2, 4, 9 - ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. 'நாலாந் திருமுறையில் முதற் பதிகமாகிய கூற்றாயின (4.1) என்பதன் யாப்பினை அடியொற்றி அமைந்தன இப்பதிகங்களாகும். யாப்பு - 3 கல்வா யகிலும் கதிர்மா மணியும் கலந்துத் திலருந் திவலின் கரைமேல் (7.3:1) தானா தனனா தனனா தனனா தனனா தனனா தனனா தனனா எனவரும் தானா தனனா ஆதலும், தனனா தானா ஆதலும் அமையும். இரண்டாம் திருமுறையில் 17 முதல் 24 வரையுள்ள இந்தளப் பதிகங்களின் கட்டளையடி இரண்டு கொண்டது ஒரடி யாக வருதல், இம்மூன்றாம் திருப்பதிகத்தின் கட்டளையாகும். யாப்பு - 4 நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு நித்தல் பூசனை செய்ய லுற்றால் (7.5:1) தானா தானா தனனா தான் தானா தானன தான தானா எனவரும். 5, 6 -ம் பதிகங்கள் ஒரே யாப்பின. தானா தனனா ஆதலும் தனனா தானா ஆதலும் அமையும். யாப்பு - 5 மத்த யானை யேறி மன்னர் சூழ வருவீர்காள் (7.7:1) தான தானா தான தானா தான தனதானா என வரும்.