பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 225 யாப்பு - 8 திருவுடை யார்திரு மாலய னாலும் (7.11:1) கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா என நாற்சீரடியாய் வெண்டளை தழுவி வருவது பதினோராந் திருப்பதிகம். இப்பதிகம் நான்காம் திருமுறையில் 17-ஆம் பதிகமாகிய “எத்தீபுகிலும் (4.17) என்னும் இந்தளப் பதிகத்தினை அடியொற்றி அமைந்திருத்தல் உணரத் தக்கதாகும். யாப்பு - 9 வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான் (7.12:1) தானா தானனா தானன தான தனதானா என வரும் அடியமைப்பினை யுடையது பன்னிரண்டாம் திருப் பதிகமாகும். தானா தனனா ஆதலும், 'தானன ஆதலும், தனதனா தானனா ஆதலும் அமையும். "ஈண்டிசைசேர் இந்தளத்துக்கு இரண்டாக' என்றமையின் கீழ்ப்போந்த பன்னிரண்டு பதிகங்களிடையே பத்து யாப்பு விகற்பங்கள் உளவேனும், தாள விகற்பங்கள் இரண்டெனவே கொள்ளல் வேண்டும்' என்பர் யாழ் நூலார்." தக்கராகம் 13 முதல் 16 வரையுள்ள பதிகங்கள் தக்கராகப் பண்ணுக்கு உரியன. இவற்றில் நான்கு யாப்பு விகற்பங்கள் உள்ளன. யாப்பு - 1 மலையாரரு வித்திரண் மாமணி யுந்தி (7.13:1) தனனாதன தானன தான தானா 35. யாழ்நூல் - பக்.251