பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 மூவர் தேவாரம் - புதிய பார்வை வரையுள்ள எட்டுத் திருப்பதிகங்களும் தக்கராகத்திற்குரிய ஏழு கட்டளைகளுள் முதல் கட்டளையாக அமைந்தவை என்பதும், முதல் கட்டளையுள் அடங்கிய எட்டுத் திருப்பதிகங்களுள் ஒன்றே ‘பூவார் கொன்றை (1.24) என்னும் இப்பதிகம் என்பதும் யாழ்நூல் தேவார இயலுள் தொகுத்துரைக்கப் பெற்றுள்ளன. இங்ங்னம் சேக்கிழாரடிகள் தக்கராகப் பண்ணுக்குரிய கட்டளை களுள் ஒரு கட்டளையுள் அடக்கிய திருப்பதிகம் எட்டெனவும், அவ் வெட்டினுள் ஒன்றாக அமைந்தது ‘பூவார் கொன்றை" (1.24) என்னும் திருப்பதிகம் எனவும் வரையறுத்துக் கூறுதலைக் கூர்ந்து நோக்குமிடத்து அவ்வாசிரியர் காலத்திலேயே தேவாரப் பண்களுக்குரிய கட்டளைகளும் அவற்றுள் அடங்கிய திருப் பதிகங்கள் இத்தனை இத்தனை என்னும் வரையறையும் விளங்க அமைந்த தெளிவான கட்டளை அமைப்பு நிலை பெற்று விளங்கினமை நன்கு புலனாகும். இன்னொரு முக்கிய குறிப்பு: சேக்கிழாரடிகள் தாம் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில் சம்பந்தர், நாவுக்கரசர், தம்பிரான் தோழர் ஆகிய மூவர் வரலாறுகளையும் விரித்துக் கூறும்பொழுது அவர்கள் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்களில்" இன்ன இன்ன பதிகங்கள் இன்னின்ன செவ்வியில் அருளிச் செய்யப் பெற்றன எனவும், அவற்றுள் சிலவற்றின் பண்கள் இவை எனவும், சில திருப்பதிகளுக்குள்ள பெயர்கள் இவை எனவும் விரித்துக் கூறியுள்ளார். திருப்பதிகங்கள் பாடப்பெற்ற செவ்வியினை குறிப் பிடும் இடங்களில் அவ்வத் திருப்பதிகங்களின் கட்டளை யமைப்பு இனிது புலப்படுத்தற்கு ஏற்ற சந்தர்ப்பங்களையும் ஆங்காங்கே அமைத்துப் பாடியுள்ளார். நம்பியாரூரர் முதன் முதலில் பாடியருளிய 'பித்தா பிறை சூடி (7.1) என்னும் திருப்பதிகம் இந்தளம் என்ற பண்ணிற் பாடப் பெற்றதென்பதும் அதன்கண் அமைந்த தாள அமைதியும் ஆகிய குறிப்புகளை, 38 முதற் பொழிவில் அற்புதப் பதிகங்கள் மட்டும்தான் காட்டப் பெற்றன.