பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O மூவர் தேவாரம் - புதிய பார்வை என செய்யுளியற் நூற்பாவில் ஒத்தாழிசைக் கலியின் வகையாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவர். 'ஒத்தாழிசைக் கலி முன்னிலை யிடமாகத் தேவரைப் பராவும் பொருண்மைத்து' என்பது மேற்குறித்த செய்யுளியற் நூற்பாவின் பொருளாகும். எனவே தெய்வத்தினை முன்னிலையாகச் சொல்லப் பெற்றனவே தேவ பாணியாம். அல்லன தேவபாணி எனத் தகா எனவும், தெய்வம் படர்க்கை யாய வழி புறநிலை வாழ்த்தாம் எனவும், தெய்வத் தன்மையில் சொல்லிற்றாகச் செய்யுள் செய்தல் கூடாதெனவும் கூறுவர் பேராசிரியர் என்னும் தொல்காப்பிய உரையாசிரியர். தேவபாணி முத்தமிழ்க்கும் பொதுவென்றும் அஃது இயற்றமிழில் வருங்கால் கொச்சக ஒரு போகாய்ப்' பெருந்தேவ பாணி, சிறு தேவபாணி என இருவகைத் தாய் வரும் என்றும் அவ்வாறு வரும் தரவினை நிலையென அடக்கி முதலிலுள்ள தரவினை முகநிலை எனவும் இடையிலுள்ள தரவினை இடை நிலை எனவும், இறுதியில் நிற்பனவற்றை முரிநிலை எனவும் பரவுதற் பொருண்மையால் செய்யுளியலில் ஆசிரியர் பெயர் கொடுத்தார் என்றும் அடியார்க்கு நல்லார் விளங்கக் கூறுவர். - “கூறிய உறுப்பிற் குறைபா டின்றித் தேறிய விரண்டு தேவபாணியும்” என்பது அடியார்க்கு நல்லார் தரும் உரை மேற்கோளாகும். தேவபாணி என்னும் பெயரை யொட்டியே தேவாரம் என்னும் இப் பெயரும் தோன்றி வழங்கியிருத்தல் வேண்டும். தேவபாணி என்பது முன்னிலையிடத்தில் தெய்வத்தைப் பரவிய செய்யுளைக் குறித்த பெயரென்பது பேராசிரியரின் கருத்தாகும். வாரம்' என்பது முன்னிலை படர்க்கை என்னும் ஈரிடத்திற்கும் பொது வாகிய தெய்வப் பாடலைக் குறித்து வழங்குவதாகும். வாரம்' என்னும் சொல்லுக்கு இசை இயக்கம் நான்கினுள் ஒன்று என்னும் பொதுப் பொருளும் தெய்வப் பாடல் என்ற சிறப்புப் பொருளும் உரியனவாதலின் அப் பொது நீக்கித் தெய்வப்பாடல் என்ற 13. தொல்,பொருள் செய்யுள் 143 (இளம்)