பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மூவர் தேவாரம் - புதிய பார்வை வேண்டும் என்று பிடிவாதமாய் அழுதது. தந்தையார் அக் குழந்தையை இட்டுச் செல்லுகின்றார். பிரம்ம தீர்த்தத்தின் கரையில் பிள்ளையாரை அமரச் செய்துவிட்டு விரைவில் நீராடித் திரும்பும் கருத்துடன் நீரில் இறங்கிச் செய்தற் குரிய பல நியமங் களைச் செய்கின்றார். பிள்ளையாரும் அவற்றை ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார். பின்பு சிவபாத இருதயர் நீரில் மூழ்கிச் செபித்தற்குரிய 'அகமருட மந்திரத்தை ஒதுதற் பொருட்டு நீருள் சிறிது நேரம் மூழ்கி இருக்கின்றார். கரையிலமர்ந்த பிள்ளையார் தம் தந்தையாரைக் காணாமல் முற் பிறப்பின் நினைவு மூளப்பெற்றுக் கண்களில் நீர் ததும்பக் கைகளால் பிசைந்து உதடுகள் துடிப்பப் பொருமி அழுகின்றார். வேறொன்றையும் நோக்காது திருத்தோணி புரத்து விமானத்தின் சிகரத்தைப் பார்த்து 'அம்மையே அப்பா என்று அழைத்து அழுகின்றார். இந்நிலையில் தோணிபுரத்து இறைவன் உமா தேவியாருடன் விடை மீது எழுந்தருளிப் பிரம தீர்த்தக் கரையை அடைகின்றார். உமையம்மையை நோக்கி “நின் துணை முலைகள் பாலடிசிலைப் பொன்வள்ளத்தில் ஊட்டுக' எனப் பணிக்க, அவரும் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்தருளிச் சிவஞானமாகிய அமிழ்தத்தையும் குழைத்துப் பிள்ளையார் கையில் கொடுத்து அவரது அழுகையைத் தீர்த்துப் பாலடிசிலை ஊட்டியருளுகின்றார். இங்ங்ணம் கவுணியப்பப் பிள்ளையார் இளம்பருவத்தில் அம்மையப்பரால் ஆட்கொள்ளப் பெற்றமையால் 'ஆளுடைய பிள்ளையார்” எனவும், தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைத்தற்கரிய சிவஞானம் பெற்றமையால் திருஞானசம்பந்தர் எனவும் போற்றப் பெறுகின்றார். இந்நிலையைச் சேக்கிழார் பெருமான், - Taಿಗ್ತ5 - பதி ஞானம். பதி ஞானத்திற்குத்தான் பதிப் பொருள் இனிது விள்ங்கும். பதிஞானத்தால் இறைவனை அறிதலையே சைவ சமய ஆசாரியர்கள் அருட்கண்ணால் காணுதல் என்று கூறுவர். இந்த ஞானம் பசு ஞானம், பாசஞானம் இரண்டிலும் வேறுபட்டது. உயர்ந்தது.