பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மூவர் தேவாரம் - புதிய பார்வை என்பது ஆறாவது பாடல். இந்தப் பதிகத்தைத் தக்க ராகத்தில் கைகொட்டிப் பாடியதைக் கண்ட கோலக்காப் பெருமான் இந்தப் பிஞ்சுக் கை வருந்தும் என்றெண்ணித் திருவைந்தெழுத்து வரையப் பெற்ற பொற்றாளம் இரண்டைப் பிள்ளையார் கையில் வந்து பொருந்தும்படி அருளுகின்றார். அம்பாள் அத்தாளத்திற்கு ஓசை கொடுக்கின்றார். இதனால் இங்குள்ள ஈசன் திருத்தாளமுடையார் என்றும் அம்பாள் ஓசை கொடுத்த நாயகி என்றும் திருநாமங்க ளால் வழங்கப் பெறுகின்றனர். சம்பந்தருக்கு நூறு ஆண்டுகட்குப் பின்னர் வந்த நம்பியாரூரருக்கு கோலக்காவில் பிள்ளையார் பொற்றாளம் பெற்ற செய்தி தெரிந்து, இத் திருத்தலத்தின் வழியாக ஏகின போது கோலக்கா இறைவனை வணங்கி, நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உல்கவர்முன் தாள்ம்ஈந்தவன்பாடலுக் கிரங்குந் தன்மையாளனை என்மனக் கருத்தை ஆளும்பூதங்கள் பாடநின்றாடும் அங்கணன்தனை என்கண மிறைஞ்சும் கோளிலிப் பெருங்கோயி லுளானைக் கோலக்காவினில் கண்டு கொண்டேனே.” என்ற திருப்பாடலில் உளமுருகிப் போற்றியுள்ளதைக் கண்டு மகிழ்கின்றோம். இதன்கண் உலகவர்முன் தாளம் ஈந்த எனத் தம்பிரான் தோழர் தெளிவாகக் குறிப்பிடுகின்றதால் சம்பந்தர் பொற்றாளம் பெற்ற அருட்செயல் உலகமக்கள் கண் காண நிகழ்ந்ததென்பது தெளிவாகின்றது. சீகாழியில் திருமுலைப்பால் உற்சவத்தன்று ஞானசம்பந்தரைக் கோலக்காவிற்கு எழுந்தருளச் செய்து தாளம் வாங்கிச் செல்வதாக உற்சவம் இன்றளவும் நடைபெற்று வருகின்றது. - + (3) முத்துச்சிவிகை முதலியன பெறுதல்: திருநீலகண்டர் யாழ்ப்பாணருடன் அவர் பிறந்த எருக்கத்தம்புலியூர், முதுகுன்றம், பெண்ணாகடம் முதலிய தலங்களை வழிபட்டுக் கொண்டு 9. சுந்த தேவா. 7.62:8