பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 35 அரவாபரணராகிய இறைவன், எக்காலத்தும் தனது திருவேடத் தினை இடைவிடாது நினைந்துருகும் ஒருமை உள்ளத்தையுடைய அடியார்களை வீட்டையும் நன்னெறியிற் செலுத்தி அவர்களைத் தொடரும் இருவினைகளையும் நீக்கியருளும் பேரருளுடையான்" என்பது இத்திருப்பாடலின் பொருளாகும். திரிபுரத்தவுண ருடைய மும்மதில்களையும் பொடிபட எரித்தருளிய இறைவன் இப்பொழுது எமக்குத் தண்ணிழல் தரும் முத்துப் பந்தரினை எழில் பெறக் காட்டியருளினான் என்பார். "மதில் மூன்றொர் கணையால் கூட எரியூட்டி, எழில் காட்டி நிழல் கூட்டு. கட்டரவினார்' எனக் குறிப்பினால் அறிவுறுத்திய திறம் உய்த் துணரத் தக்கதாகும். (7) உலவாக் கிழிபெறுதல்: பட்டீசுரத்தினின்றும் புறப்பட்ட பிள்ளையார் பல தலங்களையும் சேவித்து விட்டுத் திருவாவடுதுறையில் அமர்ந்திருந்தார். அவருடைய தந்தையார் அந்நிலையில் தாம் வேள்வி இயற்றுதற்குரிய காலம் அணுகிய தெனத் தெரிவித்து அதற்குரிய பொருள் வேண்டுமெனத் தெரி வித்தார். அவரது வேண்டுகோட் கிசைந்த பிள்ளையார், 'எஞ்ஞான்றும் ஈறிலாப் பெருஞ் செல்வத்தைத் தந்தருள்வன ஆவடு துறையிலமர்ந்த எந்தையார் திருவடிமலர்களன்றோ!' என எழுந்து ஆவடுதுறை மாசிலா மணியீசர் முன்பு எய்தி நின்று 'நீள் நிதி வேண்டினார்க்கு ஈவதொரு பொருளையும் உடையே னல்லேன். நின் திருவடித்துணையன்றி மற்றொன்றைக் கனவிலும் அறியேன்" எனக் கூறி இறைவனது பேரருளை வினவும் நிலையில் இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமையாளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடு துறையானே" 19. சம்பந்தேவா,3,4:1