பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மூவர் தேவாரம் - புதிய பார்வை அப்பொழுது அரசன் சமணர்களை நோக்கி, 'இப்பொழுது நீவிர் தோற்றிலிரோ?' என்று சொல்லி நகைக்கின்றான். இந் நிலையில், அவர்கள் வேந்தனை நோக்கி மன்னர் பெருமானே, ஒரு வாதினை மும்முறை செய்து உண்மை காணலே முறை யாகும். இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்று வெள்ளத்தில் இட்டால் எவருடைய ஏடு நீரில் எதிரேறிச் செல்கின்றதோ அவ்வேட்டிற்குரியவரே வென்றவ ராவர்" எனக் கூறுகின்றனர். அமைச்சர் குலச்சிறையார் அமணர்களை நோக்கி, "இனிமேல் செய்யக் கருதும் வாதில் தோற்பவர்கள் தம் தோல்விக்கு அடை யாளமாகப் பெறும் இழப்பு இன்னது என்பதை இப்பொழுதே உறுதி செய்து கொள்ள வேண்டும்" என்கின்றார். இதனைக் கேட்ட சமணர்கள் செற்றமுற்று 'யாம் இவ்வாதில் தோற்போ மாயின் எங்களை இவ்வரசனே கழுவிலேற்றும் கடமையுடை யவன் என்று கூறுகின்றனர். சமணர்களின் சூளுரையைக் கேட்ட பாண்டியன் அவர்களை நோக்கி நீவிர் நும் செய்கையை மறந்து செற்றத்தால் வாய் சோர்ந்து பேசிவிட்டீர்கள்? இனி வையை யாற்றில் ஏட்டினை இடப் போதல் முறை' என்று கூறுகின்றனர். (இ) புனல் வாதம்: அரசன் கட்டளைப்படி இருதிறத்தாரும் வைகைக் கரைக்கு வருகின்றனர். முன்னர்த் தோல்வியுற்றவர்கள் பின்னரும் தோல்வியுறார் என்பது சமணர்களின் நம்பிக்கை. பாண்டியன் முன்னிலையில் "அஸ்தி நாஸ்தி என்ற வடமொழித் தொடரை ஏட்டில் எழுதி அதனை வைகை நதியில் இடுகின்றனர். அது வெள்ளத்தை எதிர்த்துச்செல்ல மாட்டாது வெள்ளத்தோடு கடலை நோக்கிச் செல்லுகின்றது. ஏட்டினை நோக்கிக் கரை வழியே ஒடிய சமணர்கள் அதனைத் தொடர்ந்து ஒட மாட்டாது திரும்பி வருகின்றனர். வந்தவர்கள் சம்பந்தரை நோக்கி 'நீவிரும் நுமது சமய உண்மையை ஏட்டில் எழுதி ஆற்று வெள்ளத்தில்