பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6O மூவர் தேவாரம் - புதிய பார்வை என்று முடித்த அளவில் அங்கிருந்த ஆண்பனைகளெல்லாம் பெண்பனைகளாக மாறிக் குரும்பை யீன்று காய்க்கின்றன. இத் திருவருள் நிகழ்ச்சியை நேரில் கண்ட சமணர்கள் பலரும் தமது சமயத்தை வெறுத்துச் சிவனெறியைத் தழுவிப் பிள்ளையாரை வணங்கினார்கள் என்பது வரலாறு." (14) எலும்பை பெண்ணாக்குதல்: தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணத்தின்போது திருவொற்றியூரில்" சில நாட்கள் தங்குகிறார் பிள்ளையார். பிறகு புற்றிடங்கொண்ட பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு மயிலை' வர எண்ணியிருக்கின்றார். மயிலையில் வணிகர் மரபில் தோன்றி வாணிகத் தொழிலில் மேம் பட்டுப் பெருஞ் செல்வம் எய்தினார் ஒருவர். சிவபக்தியால் சிறந்து விளங்கி சிவநேசர் என்னும் பெயர் பெற்று விளங்குகின் றார். இவர் புறச் சமயங்களைத் தமிழ் நாட்டைவிட்டு அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவர் காழிப்பிள்ளை யாரின் பெருமையைக் கேள்வியுற்றிருக்கின்றார். இவருக்குப் பிறந்த பூம்பாவை என்ற அழகுடைய நங்கை மணப்பருவம் எய்தியிருக்கின்றாள். இவளையும் தாம் ஈட்டிய பொருளையும் தம்மையும் சிவநேசர் காழி நாடுடையவர்க்குக் கொடுக்க எண்ணி யிருக்கின்றார். 40. பெ.பு: ஞானசம்பந்தர் புரா. 977-983 41. ஒற்றியூர்:சென்னை - தங்கசாலைப் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்தில் சென்று இவ்வூரை அடையலாம். புற்றிடங் கொண்டார், வன்மீக நாதர், படம்பக்க நாதர் என்பன மூலவரின் பெயர்கள். பட்டினத்தடிகள் போற்றிய தலம். அவருடைய முத்தி தலமும் இதுவே. அடிகளாரின் கோயில் தேர் நிலையிலிருந்து அரைக் கல் தொலைவிலுள்ளது. 42. மயிலை (மயிலாப்பூர்): சென்னை சென்ட்ரல், எழும்பூர் நிலையங் களிலிருந்து 4 கல் தொலைவு. உமாதேவியார் மயிலுருவில் சிவபெருமானைப் பூசித்து தமது சுய உருவம் பெற்று இறைவனைத் திருமணம் புரிந்து கொண்ட தலம். பிள்ளையார் எலும்பைப் பெண்ணாக்கிய நிகழ்ச்சி இத்திருக்கோயிலில் நடைபெற்றது.