பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மூவர் தேவாரம் - புதிய பார்வை பொடியார்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனங்கள் முடிவாக்கும் துயர்நீங்க முன்னைவிடம் அமுதானால் படியார்க்கும் அறிவரிய பசுபதியார் தம்முடைய அடியார்க்கு நஞ்சமுதம் ஆவதுதான் அற்புதமோ?" என்பது அவர்தம் திருவாக்கு. நாவுக்கரசரும் நஞ்சினையும் விரும்பி உண்ணத் தக்க நல்லமிழ்தமாக மாற்றியருளிய இறைவனது அருட்டிறத்தை, துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே அஞ்செழுத் தோதி நாளும் அரனடிக் கன்பதாகும் வஞ்சனை பாற்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி அடிய னாரே." எனவரும் திருநேரிசையில் தெளிவாகக் குறிப்பிட்டுப் போற்றி யுள்ளமையைக் கண்டு மகிழலாம். (5) மதயானையின் இடரினின்றும் உய்தல்: நஞ்சினை உண்டு சாகாமல் பிழைத்திருந்த நாவுக்கரசரைக் கண்ட நஞ்சினும் கொடிய சமணர்கள், 'வெவ்விடமும் இவனுக்கு அமுதாயிற்று. இனி, இவன் பிழைப்பானாகில் நமக்கு விநாசமே என்று நடுக்கமுறுகின்றனர். அரசனிடம் சென்று, "வேந்தர் பெருமானே, நாம் நஞ்சு கலந்த உணவை உண்பிக்கவும், நமது சமயத்தில் கற்றுக் கொண்ட மந்திர வன்மையால் நஞ்சு தன்னைக் கொல்லாத படிக் காத்துக் கொண்டான். அவன் மரிக்காதிருப்பானேயாகில் எம்முடைய உயிரும் நும்முடைய ஆட்சியும் அழிவது திண்ணம்' 52. பெரி.புரா, திருநாவுக்.புரா - 105 53. நாவுக், தேவா. 4.70:3