பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா ဒါ့ငဲ့- 105 அ) பந்தடி ஆட்டக்காரர் ஒருவர் வரிசை முறையில் தவறாகி வந்து ஆடும்போது கண்டுபிடிக்கப்பட்டால், அதாவது அவர் பந்தடிக்கின்ற தளத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டால், உடனே யார் அந்த வரிசை முறையில் வரவேண்டுமோ, அவரை அழைத்து வந்து ஆடச் செய்யலாம். அவ்வாறு ஆடத் தொடங்கும்போது, தவறாக ஆடியவர் அப்பொழுது எத்தனை பந்து (Ball) எத்தனை அடி (Strike) என்ற கணக்கில் இருந்தாரோ, அந்தக் கணக்கையே மேற்கொள்ளச் செய்து தொடர்ந்து ஆடலாம். அதே சமயத்தில், மற்ற ஆட்டக்காரர்கள் தளம் மாறிச் சென்றிருந்தாலும், ஒட்டம் எடுத்திருந்தாலும், அது சரியென்றே ஏற்றுக் கொள்ளப்படும். ஆ) தவறான வரிசை முறையில் ஒருவர் வந்து ஆடி, அவரது ஆடும் வாய்ப்பு (Turn) முடிந்து, இன்னொரு பந்தடி ஆட்டக்காரர் ஆட வந்து நின்று, அவருக்குப் பந்தெறிவதற்கு முன்னால் இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், தவறான வரிசையில் வந்து அடித்தாடியவர் ஆட்டமிழப்பார் (Out). அப்பொழுது, எடுத்த ஓட்டங்கள் எல்லாம் குறிப்பிலிருந்து நீக்கப்படும். தளம் மாறி ஒடியவர்கள் அவறான பந்தடி ஆட்டக்காரர் வந்தபோது, இருந்த இடம் கிரும்பவும், அதாவது முன்னர் தாங்கள் நின்று கொண்டிருந்த இடங்களுக்குச் சென்று நிற்க வேண்டும். பிறகு, சரியான வரிசையில் பெயர் உள்ள ஆட்டக் "ரே வந்து பந்தடித்தாட அழைக்கப்படுவார்.