பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 థ్రి மென் பந்தாட்டம் தவறான வரிசையில் வந்து ஆடிய ஆட்டக்காரர் ஆட்டமிழக்கும் பொழுது, அவர் மூன்றாவதாக ஆட்டமிழந்தார் என்றால், சரியான வரிசையில் உள்ள ஆட்டக்காரர், திரும்பவும் ஆடத் தொடங்குகின்ற அடுத்த முறை ஆட்டத்தில், முதலாவது பந்தடி ஆட்டக்காரராக ஆக்கப்படுவார். இ) தவறான ஆட்டக்காரர் வந்து ஆடி, பிறகு அடுத்த பந்தடி ஆட்டக்காரர் வந்து நின்று, முதலாவது பந்தும் எறிந்த பிறகு (First pitch) இந்தத் தவறு கண்டுபிடிக்கப் பட்டால், தவறாக வந்து ஆடியவர் வாய்ப்பு சரியானது என்றே ஏற்றுக்கொள்ளப்படும். அப்பொழுது எடுத்திருந்த ஒட்டங்கள், மாறியிருந்த தளங்கள் எல்லாம் சரியான தென்றே ஏற்றுக்கொள்ளப் படும். அதற்கு அடுத்து பந்தடிக்கும் வாய்ப்பு, தவறாக வந்து ஆடியவருக்கு அடுத்தப் பெயருள்ளவருக்கே கொடுக்கப்படும். யாரும் ஆட்டமிழந்தார் என்று நடுவர் அறிவிக்கமாட்டார். தனக்குரிய வாய்ப்பைத் தவறவிட்டுவிட்ட பந்தடி ஆட்டக்காரருக்குத் திரும்பவும் வாய்ப்பு அப்பொழுது கிடைக்காது. அவர் தனது ஆடும் வாய்ப்பை அந்த 'முறை ஆட்டத்தில் இழந்து போனார். மீண்டும் அவருக்கு எந்தமுறை ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுதுதான் வாய்ப்பு கிடைக்கும். ஈ) தவறாக வந்தவரது ஆடும் வாய்ப்பு முடிவதற்குள், மூன்றாவது ஆட்டக்காரர் ஆட்டமிழந்துவிட்டால், அடுத்த முறை ஆட்டத்தில், இவரே முதலாவது பந்தடி ஆட்டக்காரராக இருப்பார்.