பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா థ్రి - 109 தண்டனை: அடித்தார் என்று நடுவர் அறிவித்த பிறகு, தளங்களில் நின்று கொண்டிருக்கும் தள ஒட்டக்காரர்கள், அடுத்த தளங்களை நோக்கி, ஒடி முன்னேறலாம். ஆனால், அவர்கள் தொடப்பட்டால் ஆட்டமிழக்கவும் கூடும். பந்தடி ஆட்டக்காரரும் ஆட்டம் இழக்கலாம். எப்பொழுதென்றால், அ) மூன்றாவது அடி (Third Strike) என்று நடுவர் அறிவிக்கின்ற பொழுது, பந்தைத் தவறவிடாமல், பந்தைப் பிடிப்பவர் பிடித்துவிட்டால், ஆ) முதல் தளத்தில் இரண்டு ஆட்டக்காரர்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் நின்று கொண்டிருந்தால், இ) பந்தைப் பிடித்தாடும் கட்டத்தில் இருந்து கொண்டே பந்தைப் பிடிப்பவர், (Catcher) தவறான முறையில் மட்டையில் பந்துபட்டு விடுவதை ஒவ்வொரு தடவையும் பிடித்துவிட்டால், தண்டனை: பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். தள ஒட்டக்காரர்கள் தொடப்பட்டால் ஆட்டம் இழந்து விடுவார்கள் என்ற சூழ்நிலையில் ஒடி, தளம் மாறிக் கொள்ளலாம். அது 'மூன்றாவது அடி'யாக இருந்தால், பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழந்துவிடுவார். ஈ) பந்தடி ஆட்டக்காரருக்கு இரண்டு அடிகளுக்கும் (Two Strikes) குறைவாக இருக்கும் பொழுது, தவறான ஒவ்வொரு பந்தும், உயரத்தில் வரும்போது விதிகளுக் கேற்ப பிடிக்கப்படாமல் இருந்தால்.