பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 114 హ్రీ மென் பந்தாட்டம் இருந்தால், 'அடி (Strike) என்பதாகக் கணக்கில் கொள்ளப்படும். 3. பந்து பிடிக்கப்படாமல் இருந்தால், தள ஒட்டக்காரர்கள், ஒரிரு தளங்கள் ஒடிக் கொள்ளலாம். பந்து பிடிக்கப்பட்டுவிட்டால், உடனே தாங்கள் முன்னர் நின்று கொண்டிருந்த தளத்திற்கு ஒடி வந்து விட வேண்டும். வர முயற்சிக்கும் பொழுது தொடப்பட்டு விட்டால் ஆட்டமிழந்து விடுவார்கள். 16. பந்து தவறாகப் பட்டு போதல் மட்டையில் பந்து தவறாகப்பட்டு போதல் (FoulTip) என்பது தவறான பந்தாட்டமாகும். அதாவது, அந்த தவறான பந்து மட்டையில் பட்ட பிறகு, பந்தடித் தாடுபவரின் தலைக்கு மேலே போகாமல் (NotHigherThan The Head) நேரே பிடிப்பவருக்குச் (Catcher) சென்று அவர் பிடித்துவிட்டால், அது தவறான பந்தாகக் கருதப் படுகிறது. குறிப்பு: அவ்வாறு போகும் பந்து பிடிக்கப்பட்டால், அது 'அடி' என்று கணக்கிடப்படும். பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். தள ஒட்டக்காரர்கள், தளங்களுக்கிடையில் தொடப்பட்டால் ஆட்டமிழந்து விடுவார்கள் என்ற விதியின்படி, ஒடிக்கொள்ளலாம். தொடப்பட்டால் ஆட்டமிழப்பார்கள். 17. பந்தைத் தொட்டாடும் பொழுது பந்தைத் தொட்டாடுதல் என்பது மட்டையை வீசி அடிப்பது அல்ல. ஆனால், வேண்டுமென்றே வரும் பந்தின் மீது மட்டை படுமாறு வைத்துத் தொட்டாடி, மிக அருகிலேயே கீழே விழுமாறு செய்து விடுவதுதான்.