பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 છે: மென பநதாடடம 4. பந்தெறியும் முறை 1. பந்தடித்தாடுபவரை நோக்கி உடனே பந்தை எறிந்துவிட வேண்டும். அவர் வேறு எந்தவித அசைவு களையும் (Motion) செய்யக் கூடாது. 2. பந்தெறியத் தொடங்கியவுடன், பந்துள்ள கையை முன் பின் என்று பலமுறை (Rocker Action) கொண்டு செல்லக்கூடாது. இரண்டு கைகளிலும் முதலில் பந்தை வைத்திருந்துவிட்டு, பந்திலிருந்து ஒரு கையை எடுத்ததும், பந்தை பின்புறமாகக் கொண்டு சென்று, பிறகு முன்புறமாகக் கொண்டு வந்து, முன்போலவே உடலுக்கு முன்புறம் பந்தை இருகைகளிலும் பந்தைப் பிடித்துக் கொண்டு நிற்பது, இந்த முறை கூடாது. 3. பந்தை எறிவதற்காகப் பின்புறம் கையை கொண்டு சென்றுவிட்ட பிறகு, இடையிலே கை வேகத்தை நிறுத்திவிடக் கூடாது அல்லது முன்நோக்கி வரும் கையின் திசையினை மாற்றிவிடவும் கூடாது (Reverse Motion). 4. பந்தெறிபவர் பின்புறம் வீசி எறிவதற்காக ஒரு முறைக்கு மேல் கையை கொண்டு செல்லக் கூடாது. பந்தை எறிவதற்கு முன், பந்தெறிபவர் தன் கையை உடலின் பின்புறத்திற்குக் (Rear) கொண்டு செல்லலாம். 5. காலை முன்புறம் ஒரடி (Step) எடுத்து வைக்கும் பொழுதே, பந்தையும் முன்னோக்கி எறிந்திருக்க வேண்டும். காலை எடுத்து வைத்துவிட்டு, மீண்டும் ஒரு முறை பந்தைப் பின்புறமாகக் கொண்டு சென்று (கைவிச்சைத் தொடர்தல்) எறிய முயலக்கூடாது. அது தவறான எறியாகும்.