பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 కేప్తా மென் பந்தாட்டம் மிழக்கலாம் என்ற நிலையில், தங்களை சோதனைக் குள்ளாக்கிக் கொண்டு, தளம் மாறி ஒடலாம், முன்னேறலாம். 4. பந்து ஆட்டத்தில் உள்ளது என்ற நிலையில், பந்து பந்தெறியாளருடைய கைக்கு வந்து, அவரது காலானது பந்தெறியும் ஆட்டத்தைத் தொட்டுக் கொண்டிருந்தால், அவர் அப்பொழுது தளம் நோக்கிப் பந்தை எறிய முடியாது. தண்டனை: கட்டத்தில் இருந்தவாறு அவர் தளம் நோக்கிப் பந்தை எறிந்தால், அது தவறான பந்தெறி (legal Pitch) என்று தீர்மானிக்கப்படும். பந்து நிலைப்பந்தாகிறது. பந்தெறியும் கட்டத்திலிருந்து எறிந்த பந்தின் காரணமாக முறையீடு ஆட்டம்’ (Appeal Play) எழுந்தால், அந்த முறையீடு நிராகரிக்கப்படும். 5. முறை ஆட்டம் ஒன்ற நடந்து கொண்டிருக்கும் பொழுது, பந்தெறிபவருடன் அவர் குழுவின் மேலாளர் அல்லது வேறு பிரதிநிதி ஒருவர், ஒருமுறை தான் வந்து கலந்து பேசி கருத்துப் பரிமாற்றம் (Conference) செய்து கொள்ளலாம். இரண்டாம் முறையாகக் கலந்து பேசினால், அந்தப் பந்தெறியாளர் பந்தெறியும் பணியிலிருந்து நீக்கப்படுவதுடன், அந்த ஆட்டம் முடியும்வரை பந்தெறியாளராகப் பணியாற்ற முடியாதவாறு நீக்கப்பட்டுவிடுவார். 9. தளங்களுக்கிடையே ஓடுதல் (Base Running) 1. தள ஓட்டக்காரர்கள் சரியான முறையில் தளத்தை தொடுதல் 1. தள ஒட்டக்காரர்கள் சரியான முறையில் தளங்களைத் தொட்டு விட்டுத்தான் ஒட வேண்டும்.