பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 အြဲ- மென் பந்தாட்டம் குறிப்பு: (2-3-க்குரியது) பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்பட்டு, தொடப்பட்டால் ஆட்ட மிழந்திடலாம் என்ற நிலையினில், தள ஒட்டக்காரர்கள் தளம் நோக்கி முன்னேறி ஒடலாம். 5. ஒரு தள ஒட்டக்காரர் முன்னோக்கியே தளம் மாறி ஒட வேண்டும். அப்படியின்றி பின்னோக்கி அதாவது வந்த தளத்திற்கே திரும்பி ஒட முயல்வது என்பது தடுத்தாடுபவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதுபோல் அல்லது ஆட்டத்தையே பரிகாசம் பண்ணுவதுபோல் ஆகும் என்பதால், அவ்வாறு ஒடக் கூடாது. தண்டனை: பந்து நிலைப்பந்தாகிறது. அவ்வாறு ஒடிய தள ஒட்டக்காரர் ஆட்டமிழக்கிறார் (Out). 6. இரண்டு தள ஒட்டக்காரர்கள் ஒரே சமயத்தில் ஒரு தளத்தில் இடம்பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. தண்டனை: விதி முறைக்கேற்ப, முதலில் ஒரு தளத்தைப் பிடித்துக் கொண்டிருப்பவரே தளத்திற்கு உரியவர் ஆகிறார். அடுத்த தள ஒட்டக்காரர், தடுத்தாடுப வரால் பந்தால் தொடப்பட்டால், ஆட்டமிழந்துவிடுவார் (Out). 7. முதலில் அதாவது முன்னால் ஒடிக் கொண்டிருக்கும் ஒரு ஒட்டக்காரர்தளத்தினை ஒழுங்காக மிதிக்காமல் ஒடி அதனால் ஆட்டமிழந்து போனால், அவரைத் தொடர்ந்து ஒடி வருகின்ற அடுத்த ஒட்டக்காரரை அது பாதிக்காது. அவர் சரியான முறையில் தளத்தினைத் தொட்டால், அந்தத் தளத்திற்கு அவர் உரியவர் ஆகிவிடுகிறார்.