பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 હર્ટ્સ மென் பந்தாட்டம் 7. தள ஒட்டக்காரர் சரியாக தளத்தைத் தொடாமலோ அல்லது தளங்களுக்கிடையிலிருக்கும் போதோ தடுத்தாடுபவர் பந்தால் அத்தளத்தைத் தொட்டாலும், தள ஒட்டக்காரரைத் தொட்டாலும்; 8. தள ஒட்டக்காரர் முதல் தளத்தைத் தாண்டி ஒடிய பின் திரும்பவும் முதல் தளத்திற்கு வராமல் இரண்டாம் தளத்திற்குச் சென்று திரும்பும்போது அல்லது சரியான விதிப்படி தொடப்பட்டால்; தண்டனை: அ. இது ஒரு முறையீடு ஆட்டமாகும் (Appeal Play). ஆகவே, தளத்திற்கு அப்பால் தடுத்தாடும் குழுவைச் சேர்ந்தவர்கள் அடுத்தப் பந்தை எறியும் முன் தங்கள் முறையீட்டைக் கூறி அவரை வெளியேற்றுமாறு செய்ய வேண்டும். ஆ. பந்து ஆட்டத்திலிருக்கும், தள ஒட்டக்காரர் வெளியேற்றப்படுவார். இ. வெளியேற்றப்பட்டவர் கண்டிப்பான முறையிலோ அல்லது அம்முறை ஆட்டத்திலோ (Inning) மூன்றாவதாக வெளியேற்றப்பட்டவராகவோ (Third out) இல்லாவிடில், எல்லா ஒட்டங்களும் கணக்கிடப்படும். 9. தள ஒட்டக்காரர்தடுத்தாடுபவரின் ஆட்டத்திற்குத் தடையேற்படுத்தினால், அவர் வெளியேற்றப்படுவார். அப்படி ஏற்பட்டத்தடையானது, தந்திரமான இரு முறை ஆடும் (Double play) ஆட்டம் என ஆட முடியாமல் செய்யத்தான் என்று நடுவர் தீர்மானித்தால், அடுத்து தொடர்ந்து வரும் தள ஒட்டக்காரரையும் சேர்த்து வெளியேற்றிவிடுவார்.