பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 o மென் பந்தாட்டம் 17. பயிற்சியாளர் வேண்டுமென்றே, வீசிய பந்தின் குறுக்கே தடையாக இருந்தால்; தண்டனை: பந்து நிலைப்பந்தாகும். அடித்தாடியவர் தள ஓட்டக்காரர் ஆனால் தவிர, மற்ற யாரும் எந்த தளங்களுக்கிடையேயும் ஒட வேண்டாம். 18. தள ஒட்டக்காரர் தளத்துடன் இணைந்து நிற்க வேண்டும். பந்து முறையாக எறிபவரின் கையை விட்டுப் போகுமுன் தளத்தைவிட்டு வெளியேறினால், அவர் வெளியேற்றப்படுவார் (Out). பந்து எறிந்த பின்போ அல்லது அடிக்க முயற்சித்த பின்போ தள ஒட்டக்காரர் தளத்திற்கு வெளியே சென்றிருந்தால், திரும்பவும் அவர் தளத்திற்கு வந்தடைய எறிபவர் நேரம் கொடுக்க வேண்டும். அவ்வாறு அவர் திரும்பவும் தளத்தை அடைந்தபின், எறிபவரின் கையை விட்டு பந்து அகலுமுன்னர் தளத்தை விட்டு வெளியே செல்லுதல் கூடாது. அதற்குபின்தளத்தை விட்டு வெளியேறினால், பந்து, எறிபவர் கையிலிருந்தாலும்கூட, தள ஒட்டக்காரர் வெளியேற்றப்படுவார். தண்டனை: பந்து நிலைப்பந்தாகும். பந்து எறிவது தடை செய்யப்பட்டு, தள ஒட்டக்காரர் வெளியேற்றப் படுவார். 10. தள ஓட்டக்காரர் ஆட்டமிழக்காத சூழ்நிலை தள ஓட்டக்காரர் கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் வெளியேற்றப்பட மாட்டார். 1. தள ஒட்டக்காரர் பந்தை தடுத்தாடுபவரின் பின்னே பந்தைத் தடுக்கும் போது, அவருக்கு குறுக்கீடு இல்லாமலிருக்கும் பொருட்டு தன் பாதையில் நகர்ந்து ஓடினால்;