பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 థ్రి மென் பந்தாட்டம் நினைவைக் கைவிடவில்லை. விடாமுயற்சியுடன் பழகிக் கொண்டே வந்ததால், அந்த 'வித்தையை மிக அற்புதமாகவே கற்றுக் கொண்டுவிட்டான். இது நடந்து போய் நான்காண்டுகள் முடிந்து போய்விட்டன. 1864ஆம் ஆண்டு ஹர்வார்டு என்ற ஒரு குழுவோடு இவன் ஆடியபோது, இவன் எறிந்த பந்தை (pitch) எவ்வாறு அடித்தாடுவது என்று புரியாமல், அடித்தாட முடியாமல் தடுமாறிப்போய் அத்தனை பேரும் ஆட்டமிழந்தனர் (Out). அன்றுதான் அந்த ஆட்டமுறையின் சிறப்பையும் அனைவரும் உணர்ந்து பாராட்டியதுடன் நில்லாமல், தாங்கள் எறிகின்ற முறையில் புதுமையை மேற்கொள்ளவும் தொடங்கினர். பில்கம் மிங்ஸின் பெருமை சரித்திரத்தில் இடம் பெற்றது. பந்தெறியும் முறையும் செழுமை பெற்றது. தட்டி ஆடும் தந்திரம் (Bunt) டாமிபார்லோ எனும் ஒரு ஆட்டக்காரர். நல்ல ஆட்டக்காரர் என்றாலும் அவர் குள்ளமானவர். வேகமாக பந்தை அடித்தாடுவதில் வல்லவர். தடுத்தாடும் ஆட்டக்காரர்களுக்கு மேலாகப் பந்து போவதுபோல, உயரமாக பந்தை அடித்து அனுப்புவதில் சமர்த்தர். அதனால், அவர் ஆட வந்துவிட்டார் என்றால், தடுத்தாடுபவர்கள் (Fielders) தூரமாகப் போய்நின்று கொண்டு, பந்தைப் பிடித்திட முயற்சி செய்வார்கள். இதை உணர்ந்து கொண்ட டாமிபார்லோ ஒரு தந்திரம் செய்தார். மனதில் எந்தவிதமான பரபரப்பும் காட்டாமல் இருந்து, உடல் அசைவில் மிகுந்த பதட்டம் உள்ளவர்போல் நடித்துக் கொண்டிருந்தார். அவர் பந்தாடும் மட்டையை வைத்திருந்த தன்மையைப் பார்த்த