பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ఖ్పే மென் பந்தாட்டம் 4. அதுபோலவே, குனிந்து நின்று கொண்டு வேகமாக அடித்தாட முயற்சி செய்கின்ற ஆட்டக் காரருக்கு சற்று உயரமாகப் பந்தைப் போட்டால் அவரால் அவ்வளவு எளிதாக அடித்தாடிட முடியாமல் போகும். ஆகவே, ஆடுகின்றவர்கள் நிற்கும் நிலையறிந்து பந்தை எறிந்திட வேண்டும். 5. ஒரு சில ஆட்டக்காரர்கள் ஆட வரும் பொழுதே, அச்சத்துடன் வருவதுண்டு. அவ்வாறு நடுங்கி வருவதைக் கண்டு கொண்டால், அவருக்கு உடனடி யாகப் பந்தை எறிந்துவிடக் கூடாது. சற்று காலம் தாழ்த்த வேண்டும். அவ்வாறு அவரைக் காக்க வைப்பதன் மூலம், அவரை மேலும் பயமுறுத்தவும் அச்சுறுத்தவும் முடியும். அதனால், அவரது ஆட்ட வேகத்தைக் குறைப்பதுடன், ஆட்டத் திறமையையும் குலைத்துவிட முடியும். ஆகவே, இதுபோன்ற சமயத்தில், தந்திர முறைகளையும் கையாள வேண்டியது மிகமிக அவசியமாகும். 6. வருகின்ற பந்தை அடித்தாடாமல், தட்டி ஆடிவிட்டு (Bunt) ஒடுவதற்காகத் தயாராக இருக்கின்ற ஆட்டக்காரராக இருந்தால், அவருக்கு நேராகப் பந்தைப் போடக் கூடாது. சற்று உயரமாக செல்வது போல் (High Ball) பந்தை எறிய வேண்டும். 7. இரண்டு முறை அடித்தாட முயன்றும் முடியாமல், இருமுறை அடித்தாடினார் (Two Strikes) என்ற நிலையில் நின்றாடிக் கொண்டிருக்கும் ஆட்டக்காரருக்கு, மூன்றாவது தடவையாவது நன்றாக அடித்தாடி விடுவதற்கேற்றவாறு உள்ள உணர்வினை ஊட்டுவது போல எறிய வேண்டும். அதேநேரத்தில், அவரால்