பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா હો- 63 == பொருத்தமானவராக அமையலாம் என்பது ஒரு சிலர் கருத்தாகும். ஏனெனில், தரையோடு தரையாக வரும் பந்து, தொட்டாடிவிட்டதால் வரும் பந்து இவற்றை எளிதாகப் பிடிப்பதுடன், இரண்டாம் தளத்திற்கு உடனே தாமதமின்றி அனுப்ப இடது கையே வசதியாக இருக்கும் என்றும் சிலர் வாதிடுவார்கள். முன்னர் கூறியது போலவே, சுறுசுறுப்பும் திறமையும் இருந்தால் எந்தக் கையாக இருந்தால் என்ன என்று சமாதானம் கூறி, மேலே தொடருவோம். தகுதியும் திறமையும் 1. உயரமாக, தாழ்வாக, விரைவாக, தரையின்மீது துள்ளி விழுவதாக வரும் பந்தைத் தவறவிடாமல், நழுவவிடாமல், பிடிக்கின்ற திறமையுள்ளவராக இருக்க வேண்டும். அதையும் வலிந்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு பிடித்து ஆடாமல் இயல்பாகவும், எளிதாகவும் பிடிக்கின்ற ஆற்றல் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். 2. தளத்தின் மீது ஒரு காலை வைத்துக் கொண்டே பந்தைப் பிடித்திட வேண்டும் என்பதல்ல. தன்தளத்தைச் சுற்றிச் சுற்றி வலம் வந்த வண்ணமாக இருக்கும் பொழுதே, தேவைக்கேற்றவாறு நின்று, முன்கூட்டியே பந்து வரும் திசையினை யூகித்துணர்ந்து, அதனை அழகாகப் பிடிப்பதற்கேற்றவாறு தயாராக நிற்கின்ற சாமர்த்தியசாலியாகவும் அவர் இருக்க வேண்டும். 3. முளை அடித்தாற்போன்று ஒரே இடத்தில் நின்று கொண்டு அல்லது உடலை 'அஷ்ட கோணலாக' வளைத்தபடி இருந்து வரும் பந்தைப் பிடிக்க முயல்வது,