பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 హ్రీ மென் பந்தாட்டம் (Bounce) பிடித்து தடுத்துவிட வேண்டும். மெதுவாக வரும் பந்தை அது தன்னிடம் வரட்டும் என்று காத்திராமல், வேகமாக முன்னே ஒடிச் சென்று பிடித்திட வேண்டும். 3. பந்தின் மேலே எப்பொழுதும் கண்ணுங் கருத்துமாக இருந்து, கவனமாக ஆட வேண்டும். வீணாக நேரத்தைக் கடத்திவிடக் கூடாது. பந்தைப் பிடித்தவுடன், எந்த இடத்திற்கு பந்து தேவை என்பதை யூகித்து உணர்ந்து கொண்டு, சரியாக போவதுபோல எறிகின்ற திறமை உடையவராக இருத்தல் வேண்டும். 4. பிறர் பகுதிக்குள்ளே ஒடும் பந்தைப் போய் பிடிக்க நேரும் பொழுது, அவருக்கும் எச்சரிக்கை தந்துவிட்டு, எச்சரிக்கையாக அவரையும் இருக்கச் செய்துவிட்டு, பிடித்தாடலாம். அதாவது ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து பந்தைத் தடுத்தாட வேண்டும். ஏனென்றால், கொஞ்சம் தாமதமானாலும், தளத்தில் ஒடுபவர்கள், வேகமாக ஒடி வந்து தொட்டுத்தப்பித்துக் கொண்டுவிடுவார்கள். 5. நேரம் பார்த்து, இடம் பார்த்துப் பந்தை எறிய வேண்டும். ஆத்திரப்பட்டு ஒட்டக்காரர் மேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் பந்தை எறிந்துவிடக் கூடாது. 6. தன் குழு ஆட்டக்காரர்கள் பந்தை எளிதாகப் பிடிப்பதற்கு ஏற்ற வகையில் மேலாகவும் சரியாகவும் எறிந்திட வேண்டும். 7. உயரமாகத் தனக்கு பந்து வந்தாலும், பிடித்த உடனே தனது தளம் நோக்கிக் கொண்டு வந்துவிட வேண்டும்.