பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 థ్రి மென் பந்தாட்டம் என்னிடமா வரப்போகிறது என்ற துறவு மனப் பான்மையும் கொண்டுவிடக் கூடாது. 4. மனம் தளர்ந்து போய்விட்டால் உடல் ஒத்துழைப்பு தராது என்பதை இவர்கள் மறந்துவிடவே கூடாது. தளர்ந்து நிற்கலாம். பந்து வந்தால் போய் பாய்ந்து பிடித்துவிடலாம்’ என்று நினைத்தால், நிச்சயமாகத் திடீரென்று இயங்கிட முடியாது. அவ்வாறு இயங்கினாலும் பந்தை இயல்பாகப் பிடித்துவிடவும் முடியாது என்பதால், மிகவும் சுறுசுறுப்புடன் நின்றாடிட வேண்டும். 5. தன்னைக் கடந்து பந்து போவது போல, கால்களை அகற்றி வைத்துக் கொண்டு பந்தைப் பிடிக்கக் கூடாது. மிகவும் எச்சரிக்கையுடன் தான் பந்தைப் பிடிக்க வேண்டும். 6. இவர்களிடம் வருகின்ற பந்து, பந்தடிக்கும் ஆட்டக்காரர் வேகமாக அடித்தாடும்போது தான் வரும். அந்த பந்து தரையோடு தரையாகவோ அல்லது உயரமாகவோ, வருகின்ற தன்மையில் அமையலாம். அப்பொழுது நன்றாகப் பந்தைப் பிடித்திட, எப்பொழுதும் சுறுசுறுப்பாக நின்றால் தானே முடியும்! ஆக, வேகமாக வரும் பந்தைக் குறியுடன் சரியாகத் தடுத்தாட அல்லது பிடித்தாடக் கூடிய பெரும் வல்லமை மிக்கவராக இவர்கள் இருந்தாடிட வேண்டும். 7. இவர்கள் குதிகால்களால் ஓடாமல், முன் பாதங்களினால் ஒடிட வேண்டும். எப்பொழுதும் பந்துக்குப் பின்னால் பந்தை விரட்டிக் கொண்டு ஒடக்கூடாது. பந்து வரும் வேகம், பந்து செல்லும் திசை இவற்றை அறிந்து கவனித்துப் பிடிக்க வேண்டும்.