பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா హ్రీ 79 நேரே பெட்டிக்குள் போய் பந்து விழுந்தால் 2 வெற்றி எண்கள், உருண்டு போய் பெட்டியைத் தொட்டால் 1 வெற்றி எண். முதலில் யார் 10 வெற்றி எண்கள் எடுக்கின்றாரோ, அவர் தான் வெற்றி பெற்றார் என்று அறிவித்து, மீண்டும் மீண்டும் ஆட்டத்தைத் தொடர வேண்டும். 11. பந்தை மட்டையால் அடித்துவிட்டு உடனே வேகமாக ஒடுதல். அடுத்த முறை இன்னும் வேகமாக ஒடுதல். பலமுறை ஒடிப் பார்த்தல். 12. பந்தை அடிப்பவருக்கு முன்னே குறிப்பிட்ட சிறிய அளவில் எல்லைக்கோடு ஒன்றைப் போட்டு, பந்தை மட்டையால் தொட்டாடிடச் செய்தல் (Bunt). பந்தை அவர் தடுத்தாடும் பொழுது, எல்லைக்குள்ளேயே பந்து கிடக்குமாறு ஆட வேண்டும். எல்லைக்கு வெளியே பந்து போகாதவாறு கட்டுப்பாட்டுடன் ஆட முயலுதல். இத்துடன், ஆட்டக்காரர்கள் ஒற்றுமையுடன் ஆட்டம் முழுமையும் தொடர்ந்தாடிடும் மனோபக்குவத் தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் தவறை மற்றொருவர் மிகைப்படுத்திக் கொண்டும், கத்திப் பேசியும் திட்டித் தீர்த்தும் ஆடுவது அழகான ஆட்டமல்ல. அது அவமானத்தை உண்டாக்கிவிடும். திறமையும் பொறுமையும் இரண்டும் மிக முக்கியமான தேவைகளாகும். பேசிக்கொண்டு ஆடுவது எதிர்க்குழுவினரின் சக்திக்கு ஈடு கொடுத்து ஆடிட உதவாது. தங்கள் திறமையையும் வெளிக்கொணர வகை செய்யாது தடுத்துவிடும்.