பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா ြဲ- 89 மூன்றாம் தளம் பற்றி அடித்தாடும் தளத்தின் நடுவர் உங்களைக் கேட்டால்தான், நீங்கள் உங்கள் முடிவினைக் &ቻ...00 வேண்டும். தவறான எறியைப் பற்றி, உங்களை நடுவர் கேட்கும் பொழுது, உங்கள் கருத்தினை அவருடன் பகிர்ந்து கொள்ளலாம். விதிமுறைகளுக்கேற்ப, ஆட்டம் திருப்திகரமாக நடக்க, உங்கள் ஒத்துழைப்பு நடுவருடன் சிறந்த முறையில் இருக்க வேண்டும். நடுவர் குறிப்பேட்டினைப் பரிசோதிக்கும் பொழுது, அவருடன் கூட இருந்து உதவி செய்யலாம். எல்லா வகையிலும் இரு நடுவர்களும் இணைந்த மனத்தினராய் இருந்து செயல்பட்டால், ஆட்டம் சிறப்புற நடந்தேறும். ஆட்டக்காரர்களின் மனமும் ஆனந்த மடையும். பார்வையாளர்களும் பரவசம் அடைவார்கள். o

  • ్మ*