பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா အြဲ- 91 எல்லைக்கும் வெளியே அடித்தாடும் இடத்திற்கும், பின் தடுப்புக்கும் இடையே 25 அடி ஆரத்திற்கு எந்தவிதமான தடையும் இல்லாத பரந்த வெளியாகவும் இருக்க வேண்டும். இரு குழுக்களும் முன்னதாகவே ஏற்றுக் கொண்டு, ஆடுகள எல்லையை நிர்ணயித்துக் கொள்வதுடன், பின் தடுப்புகள், வேலிகள், வாகனம் நிறுத்துமிடங்கள், பார்வையாளர்கள் இருக்கைகள் எல்லாவற்றையும் குறிப்பிட்ட எல்லைக்குள்ளே அமைந்திருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். 200 அடிக்கும் குறைவாக பரந்த வெளி அமைந்திருந்தால், அது நடுவர்கள் கவனத்திற்குக் கட்டாயமாகக் கொண்டு வந்திருக்கப்பட வேண்டும். 2. oGssmih oleološ5éo (Laying Out Diamond) முதலில் மைதானத்தில் பந்தடித்தாடும் தளத்தினைக் குறித்துக் கொள்ள வேண்டும். பந்தைப் பிடிப்பவர் (Catcher) நிற்கும் இடத்தின் அருகாமையில் உள்ள பந்தடித்தாடும் தள மூலையில், ஒரு ஆணியை அடித்து, அதில் நீண்ட கயிறு ஒன்றையும் கட்டிவிட வேண்டும். அந்த நீண்டக் கயிற்றில் 46 அடி, 60 அடி 84 அடி 10% அங்குலம். 120 அடி என்று அளந்து, குறியிட்டு வைத்துவிட வேண்டும். பிறகு, நேர் பக்கமாக, கயிற்றை இழுத்துக் கொண்டு போய் 46 அடிதுரத்தைக் குறித்தால், அது பந்தெறிவோர் எறியும் இடமாகக் காட்டும். இன்னும் நேரே கயிற்றைக் கொண்டு சென்றால் 120 அடி குறிவரும். அதுதான் இரண்டாம் தளம் குறிக்கப்பட வேண்டிய இடமாகும்.